வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இறந்த நிலையில் நிர்வாக வசதிக்காக அதிலிருந்த திருப்பத்தூர் தனி மாவட்டமாக உதயமானது. மாவட்டத்தின் அப்போதைய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் விஜயகுமார் பொறுப்பில் இருந்தார். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இப்படியாக போலீசாரின் வேட்டையில் முக்கிய புள்ளியாக இருந்தவர்( இருப்பவர்) ஒரு பெண். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வருபவர் பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி. இவர் சாராய வியாபாரம் மட்டுமின்றி கஞ்சா, போலி மதுபாட்டில்கள், உள்ளிட்டவை தயார் செய்து சுற்றுவட்டாரம் முழுக்க விற்பனை செய்து வருகிறார். இதனால் முக்கிய சாராய புள்ளியாக விளங்கக்கூடிய மகேஸ்வரியை கைது செய்து அவருடைய சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டுமென திட்டத்தை தீட்டி அதற்கான நடவடிக்கைகளில் விஜயகுமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 


ஆரம்ப காலகட்டத்தில் இருந்து .....


சாராய வியாபாரி மகேஸ்வரியை கண்காணித்து அது குறித்தான தகவல்களை சேகரித்தார் எஸ்பி விஜயகுமார். அப்போது விசாரணையில் மகேஸ்வரி பல முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் இவர் சற்று ஊனமுற்றவர் என்பதால் பல முறை சிறை சென்று சிறிது காலத்தில் விடுதலையாகி வந்து மீண்டும் அவருடைய சாராய தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அதேநேரத்தில் இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தால் அவர்களை சாராய கும்பலை வைத்து மிரட்டி வைப்பதும் அவருடைய வாடிக்கையாக இருந்துவந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் யாரும் மகேஸ்வரியின் விசயத்தில் தலையிடுவதில்லை. ஏன் அரசு அதிகாரிகள் அப்படிதானாம்...



இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முக்கிய குற்றவாளியான மகேஸ்வரி மற்றும் அவருடைய கூட்டாளிகள் 10 பேரை விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், கள்ளச்சாராயம் மற்றும் ரூ 20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், சாராய தொழிலில் சம்பாதித்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 


இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக அப்பகுதியில் சாராயம் உள்ளிட்ட மது விற்பனை குறைந்திருந்தன அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜயகுமாரும் பணி மாறுதல் செய்து செங்கல்பட்டு எஸ்பியாக சென்றார். மகேஸ்வரியும் வெளியே வந்தார். அதன் பின்னராக சிபிசக்கரவர்த்தி மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார் அப்போது அப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாகத் தகவல் கொடுத்ததாக ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது. தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய இந்த கொலைச் சம்பவம் சட்டமன்றத்தில் பேசக்கூடிய அளவிற்கு பெரிய சம்பவமாக அரங்கேறியது. இதனால் மாவட்ட எஸ்பி மற்றும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பேர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக புதிதாக எஸ்பியாக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த பொழுது மது அமலாக்கப்பிரிவு ஏடிஎஸ்பி ஆகவும் பொறுப்பு வகித்தார். இதற்கிடையே, வாணியம்பாடியை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபாட்டில்கள் அதிக அளவில் விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. 


‘மக்கள் போர்க்கொடி’ 


நேதாஜி நகர் பகுதியில் திருவிழா ஒன்றின்போது இளைஞர்கள் மீது சாராய கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் சாராய கும்பலை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.  சாராய கும்பலின் முக்கிய குற்றவாளியான மகேஸ்வரியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி சாராய பொட்டலங்களை சாலையில் கொட்டி போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர். இதனால் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 



இந்த நிலையில் மகேஸ்வரிக்கு சொந்தமான கொட்டகைக்கு இளைஞர்கள் தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமின்றி மகேஸ்வரி சாராய கும்பலை மற்றும் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போர்க்கொடி தூக்கினர். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 



ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 முட்டைகளில் ஆயிரக்கணக்கான கள்ளச்சாராய பொட்டலங்களை  பறிமுதல் செய்த பொதுமக்கள்  காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று சாராய பொட்டலங்களை கைப்பற்ற முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து இப்பகுதியில் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். அப்பொழுது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினர்.



மேலும் படிக்க | விழுப்புரம் : பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - 10 பேர் மீது வழக்குப்பதிவு


இருந்தபோதிலும் அப்பகுதியில் இருக்கக்கூடிய சாராய பொட்டலங்களை எடுத்து செல்ல அனுமதிக்காமல் வாகனத்தை சிறைபிடித்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் அங்கிருந்து கள்ளச்சாராயத்தை ஒருவழியாக எடுத்துச் சென்றனர்.



மேலும் நியூட்டன் பகுதியிலுள்ள மது அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து மகேஸ்வரியின் கூட்டாளிகளை பிடிக்க டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் களத்தில் இறங்கினர். இதில் மகேஸ்வரியின் கூட்டாளிகளான மகேந்திரன், பழனி ,சிரஞ்சீவி,எலி சரவணன், செல்வி உள்ளிட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.இந்நிலையில், சாராய வியாபாரி மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன் உட்பட 7 பேர் திருவண்ணாமலையில் கைது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விசாரணையின் முடிவில் வெளிவராத பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | கூலித்தொழிலாளியின் தலையில் கல்லைப்போட்டு கொடூரக் கொலை..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR