சட்டப்பேரவையில் பேசிய  திருப்போரூர் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 2.13 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆளுநர் மாளிகை கட்டப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். தமிழர் நலன் சார்ந்த 211 கோப்புகள் ஆளுநர் மாளிகையில் தேங்கி கிடக்கும் நிலையில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காகத் தான் ஆளுரின் செயல்பாடு இருக்க வேண்டும் எனவும் எஸ்.எஸ். பாலாஜி குறிப்பிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆளுநருக்கு மாளிகை எதற்கு? எனக் கேள்வி எழுப்பிய  அவர், ஆளுநர் மாளிகை என்றால் வனச்சட்டம் கைகட்டி நிற்குமா? எனவும், ஆளுநர் மாளிகை இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும் எனவும் கூறினார். ஆளுநருக்கு அமைச்சர்கள் வசிக்கும் பசுமை வழிச்சாலையில் குடியிருப்பை வழங்கிட வேண்டும் என முன்மொழிவதாகவும் எஸ்.எஸ்.பாலாஜி கூறினார்.


மேலும் படிக்க | ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள்; மீண்டும் உள்ளாட்சிகள் தினம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு



திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 22 சாலைகள் இருப்பதாகவும், பெரும்பாலான சாலைகளில் குப்பைகள் நிறைய தேங்கி கிடப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், சுற்றுச்சூழல் குறித்து அதிகாரிகளுக்கு போதிய புரிதல் இல்லை எனவும் கூறினார். அதற்குப் பதிலளித்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், எஸ்.எஸ்.பாலாஜி குறிப்பிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். 


மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் எனவும், மருத்துவக் கழிவுகளை கையாள அரசு போதுமான நடவடிக்கைகளை துரிதமாக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை விடுத்தார். 


மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR