Thoothukudi Sterlite plant: தாற்காலிகமாக திறக்க கோரிய Vedantaவின் மனு தள்ளுபடி- SC
ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக இயக்க அனுமதி கோரிய வேதாந்தா மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
புதுடெல்லி: சுற்றுச்சூழல் சிக்கல்களை ஏற்படுத்திய விவகாரத்தில் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தாற்காலிகமாக திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
2 லட்சம் பேர் இந்த ஆலையை சார்ந்து வேலை வாய்ப்புகளை பெற்று வருவதாக வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர். மேலும், நாட்டின் 36 சதவிகித தாமிர (copper) உற்பத்தியை ஆலை செய்துவந்தது என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆலையை தாற்காலிகமாக திறப்பதற்கு தமிழக அரசு சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆலை மூடப்பட்டிருப்பதால், தூத்துக்குடி (Thoothukudi) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீரின் தரம் மேம்பட்டுள்ளது என தமிழக அரசு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை எடுத்துரைத்தனர்.
ஆலையை மறைமுகமாக திறக்கும் முயற்சியாகவே இந்த தற்காலிக திறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தையும் தமிழக அரசு முன்வைத்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் (Supreme Court) தாற்கலிகமாக, சோதனை அடிப்படையில் திறக்கக் கோரிய மனுவை நிராகரிக்கிறோம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு நேரடி விசாரணைக்கு வரும்போது, இந்த கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தாற்காலிகமாக திறக்கும் விவகாரம் முடிவுக்கு வந்தது.
Also Read | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு எதிர்ப்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR