ஓபிஎஸ்ஸுக்கும் இபிஎஸ்ஸுக்கும் நடந்த அதிகார யுத்தம் முடிவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து நீக்கினார். அதுமட்டுமின்றி அவரிடம் இருந்த பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசனிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் ஓபிஎஸ்ஸிடமிருந்து பறித்தார் இபிஸ். இதனால் ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் தன்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை என ஓபிஎஸ் கூறிவருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் எதிர்கட்சி துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கிடையே, சட்டப்பேரவை பதவிகள் தொடர்பாக எந்த கடிதம் வந்தாலும் அதனை பரிசீலிக்கக்கூடாது என்று பன்னீர்செல்வம் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் பேசுகையில், “எதிர்க்கட்சி கொறடா வேலுமணி சென்னையில் உள்ள எனது உதவியாளரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் என்ன எழுதியிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர்கள் கூறுகிறீர்கள். ஆனால் நான் இன்னும் அந்த கடிதத்தை படித்துப் பார்க்கவில்லை.


மேலும் படிக்க | EPS எடுத்த அதிரடி நடவடிக்கை; எதிர்கட்சி துணை தலைவர் பதவியையும் இழந்த OPS


கடந்த வாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓபிஎஸ் ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதம் பரிசீலனையில் உள்ளது. அதேபோல், கொறடா கொடுத்துள்ள கடிதத்தையும் படித்துப் பார்த்து பரிசீலனை செய்து, சட்டப்பேரவைத் தலைவர் என்ற அடிப்படையில், ஜனநாயக வழியில் சட்டப்படி விதிப்படி நியாயமாக ஒருதலைபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி ஜனநாயகப்படிதான் இந்த ஆட்சி நடக்கிறது. தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு எங்களுக்கு கிடையாது.



66 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். யார் கட்சி செயலாளர் என்பதெல்லாம் அவர்களுடைய கட்சி உள்விவகாரம். அதை அவர்களுக்குள் பேசி முடிப்பார்கள். இதில் பேரவைத் தலைவர் உள்ளிட்ட யாரும் தலையிட போவதில்லை.அவர்கள் என்ன காரணத்திற்காக நீக்கியுள்ளனர், எதற்காக புதிய நபரை நியமித்துள்ளனர் என்பதையெல்லாம் படித்துப்பார்த்து சட்டப்பேரவை விதி என்ன கூறுகிறது என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்துதான் முடிவு செய்யப்படும்” என்றார்.


மேலும் படிக்க | அது ஒரு கெட்ட கனவு... நடிகையை ஏமாற்றிய திரௌபதி இயக்குநர் - நடிகையின் ஒப்புதல் வாக்குமூலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ