EPS எடுத்த அதிரடி நடவடிக்கை; எதிர்கட்சி துணை தலைவர் பதவியையும் இழந்த OPS

எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை மூலம் ஒருங்கிணைப்பாளர் பதவியை தொடர்ந்து எதிர்கட்சி துணை தலைவர் பதவியையும் இழந்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 19, 2022, 12:40 PM IST
EPS எடுத்த அதிரடி நடவடிக்கை; எதிர்கட்சி துணை தலைவர் பதவியையும் இழந்த OPS title=

அதிமுகவில், ஒற்றை தலைமை கோரிக்கை வலுவடைந்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த  ஜூலை 11ஆம் தேதி அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டார்.  பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிரடி காட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.  OPS வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி, OPS ஆதரவாளரான வைத்திலிங்கம் வகித்து வந்த துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பறிக்கப்பட்டன.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர்,  தனது ஆதரவாளர்களை துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளில் எடப்பாடி பழனிச்சாமி நியமித்தார். தனக்கு நெருக்கமான பலருக்கும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ள நிலையில், அடுத்ததாக ஓபிஎஸ் வகித்து வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பறித்துள்ளார். 

மேலும் படிக்க | OPS vs EPS: பறிபோகிறது மற்றொரு முக்கிய பொறுப்பு.. ஓபிஎஸ்-க்கு போராத காலம்

மேலும் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் துணைச் செயலாளர் பதவிகளுக்கா நியமனங்கள் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி துணைச்செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்ட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றக்கூடாது. பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ஈபிஎஸ் தரப்பு கடிதம் அனுப்பினால் அதை நிராகரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். மேலும்,  இந்த பிரச்சனையில், ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கிடைத்த ‘புரட்சி’ பட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News