வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்த கனமழையால் சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மாநகராட்சி (Chennai Corporation) மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் செம்மஞ்சேரி, கண்ணகி நகர், மந்தைவெளி, மையிலாபூர், புரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நீர்  (Rain) தேங்கியுள்ளது. இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Also Read | பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!


இதற்கிடையில் கனமழை காரணமாக கனகம்மாசத்திரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கி உள்ள அவல நிலை ஏற்பட்டு உள்ளதால் பள்ளியை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


 



 


திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பரவலாக சராசரி மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆறு, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தும், குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்து வருகிறது. 


இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 5 நாட்களாக பெய்த மழையின் காரணமாக பள்ளியை சுற்றி மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக பள்ளி வகுப்பறைகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கி உள்ளது. ஆனால் இதுநாள் வரையிலும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இப்பள்ளியை பார்வையிட்டு மழை நீர் வடிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


எனவே இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கனகம்மாசத்திரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சூழ்ந்திருந்த மழை நீரை அகற்றி சீரமைத்து தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.


ALSO READ: Humanity in Rain: மழையில் மலர்ந்து மணம் வீசும் காவல்துறையினரின் மனிதநேயம்  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR