Tamil Nadu Murder Case: திண்டிவனம் தாலுகா வேம்பூண்டி காலனி பகுதியை சேர்ந்தவர் ரமணி என்கிற ரமணா. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேம்பூண்டி கிராம முகாம் செயலாளராக இருந்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் ஆரீப்பாஷா என்பவர் பெலாக்குப்பம் அருகே நடத்தி வரும் ஓட்டலுக்கு அடிக்கடி உணவு சாப்பிட செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது சாப்பிட செல்லும் போதெல்லாம் உணவுப் பொருட்கள் தரமானதாக இல்லையென்று கூறி வாடிக்கையாளர்கள் முன்பாக கலாய்த்து வந்துள்ளார். இதனால் ரமணா மீது ஆரீப்பாஷாவுக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் தனது நண்பரான ஆட்டோ பாஸ்கருடன் ஆரீப்பாஷாவின் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார் ரமணா. அப்போது ஆரீப்பாஷாவிடம் வழக்கம்போல் உணவு தரமாக இல்லை என ரமணா கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனே கண்ணன் என்பவர் அவர்களை சமாதானப்படுத்தினார்.


மேலும் படிக்க- Crime News: பகீர் சம்பவம்! கஞ்சா போதையில் கொலை செய்ததை உளறிய ஆசாமி! ஷாக்கான போலீஸ்


அப்போது ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக ஆரீப்பாஷா, அவரது தம்பி ரஹ்மான், ஆனந்தன், செந்தில்வேல், சையது , பாஸ்கர் என்கிற வலைபாஸ்கர், சீனிவாசன், முகமதுகவுஸ், குட்டி என்கிற ராகவன் ஆகிய 9 பேரும் சேர்ந்து ரமணாவை உருட்டுக்கட்டை, இரும்புக்குழாய் ஆகியவற்றால் சரமாரியாக தாக்கியதோடு கத்தியால் தலை, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டியுள்ளனர். இதை தடுக்க வந்த ஆட்டோ பாஸ்கர், கண்ணன் ஆகியோரையும் அவர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இந்த கொலை குறித்த புகாரின் பேரில் ஆரீப்பாஷா உள்ளிட்ட 9 பேர் மீதும் ரோஷணை போலீசார், கொலை வழக்கு மற்றும் பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து ரமணியை தாக்கிய 9 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் எஸ்சிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போதே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமதுகவுஸ் என்பவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.


மேலும் படிக்க- குடும்ப வன்முறையின் உச்சம்! குடும்பத்தினரே திருட்டு பட்டம் கட்டி கொலை செய்த கொடூரம்


இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட ஆரீப்பாஷா, ரஹ்மான், ஆனந்தன், செந்தில்வேல் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா  25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், சையது, பாஸ்கர், சீனிவாசன்,  ராகவன் ஆகிய 4 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.


இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆரீப்பாஷா உள்ளிட்ட 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை அடுத்து பதற்றமான சூழல் நிலவியது.


மேலும் படிக்க- தினமும் மனைவிக்கு மயக்க மாத்திரை... 51 ஆண்களை அத்துமீற வைத்த கணவர் - அதிர்ச்சி சம்பவம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ