காசியாபாத்: உத்தரப்பிரதேசத்தில் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற இளம் பெண்ணுக்கு திருட்டு பட்டம் கட்டி உறவினர்களே அவரை சித்திரவதை செய்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்...
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் .இவருக்கு ஹினா என்ற மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இவர்களது குழந்தை பிறந்த நாள் விழாவிற்காக உறவினர்களை அழைத்துள்ளனர். அந்த நேரத்தில் இவர்களது வீட்டில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது.
ரமேஷுக்கு முதலில் தனது மனைவி ஹினா மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஹினாவை தாக்கியுள்ளார் ரமேஷ். பின்னர் நகையை திருடியது ஹினா இல்லை என்பது உறுதியானது. அப்போது ரமேஷின் சந்தேகப் பார்வை பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த சபீனா என்ற இளம் பெண் மீது விழுந்துள்ளது.
மேலும் படிக்க | 15 வயது மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - மரண வாக்குமூலத்தில் பகீர்
இதனால் ரமேஷ் ,ஹினா மற்றும் அவர்களது உறவினர்கள் சபீனாவின் வீட்டிற்கே சென்று நகை பற்றி கேட்டுள்ளனர் . நகையை தான் எடுக்கவில்லை என்று சபீனா மறுக்கவே ஆத்திரமடைந்த அவர்கள் நகைகளை எங்கு வைத்திருக்கிறாய் என்று கூறி சபீனாவை கனமான பிளாஸ்டிக் குழாயால் தாக்கியது மட்டுமின்றி அவரது உடல் உறுப்புகளை அறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
வலி தாங்க முடியாமல் சபீனா சத்தம் போடவே அவரது சத்தம் வீட்டை விட்டு வெளியில் கேட்காமல் இருப்பதற்காக டிவியில் பாட்டு ஒன்றை சத்தமாக வைத்துள்ளனர். மேலும் சபீனாவுடன் சேர்த்து அவரது உறவினர் ஒருவர் மற்றும் கார் ஓட்டுநர் ஒருவர் என மூன்று பேரையும் தாக்கியுள்ளனர்.
அதீத சித்திரவதை காரணமாக சமீனா உயிரிழந்துள்ளார் பின்னர் ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். நீண்ட நேரமாக அதிக சத்தத்துடன் இசை ஒலித்துக் கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினர் இது பற்றி உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காசியாபாத் போலிசார் உயிரிழந்த சபீனாவின் உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காயம் அடைந்த சபீனாவின் உறவினர் மற்றும் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய காவல் உதவி ஆணையர் ரவிக்குமார், இறந்தவரின் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். உறவினர் அழைப்பின் பெயரில் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற இளம் பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | Manslaughter: மகளை முதலைக்கு உணவாக்கிய அப்பா! ஜாதிவெறியில் ஆணவக்கொலை செய்த தந்தை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ