அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் இருக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் குவியல் குவியலாக மதுபாட்டில்கள் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, காளையார்கோயில், திருப்புவனம், பரமக்குடி, மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் நோய்களின் சிகிச்சைக்கு வந்து செல்வது குறிப்பிடதக்கது.



இந்நிலையில் மருத்துமனை வளாகத்தில் விலை உயர்ந்த மது பாட்டில்கள் மற்றும் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துமனை வளாகத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் விடுதிக்கு அருகே மதுபாட்டில்கள் குவியல், குவியலாக கிடப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 


இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



மேலும் படிக்க | நீதிபதியின் கருத்தை நீக்கிய நீதிபதிகள்.! 


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், " சிவகங்கை மருத்துவமனை நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதிகள் செயல்படும் பகுதிகளில் காலி மதுபாட்டில்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ பணியாளர்களோ அல்லது மருத்துவம் பயிலும் மாணவர்களோ மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசி இருக்கலாம். ஏனெனில் அப்பகுதியில் நோயாளிகளோ அல்லது உறவினர்களே செல்வதற்கு வாய்ப்பில்லை. 


மருத்துவமனையில் பணியாற்றும் முக்கிய ஊழியர் ஒருவர் விலை உயர்ந்த மதுபாட்டில்களை சப்ளை செய்வதாக தகவல் வருகிறது.  எனவே அவரையும் கண்காணித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான் மருத்துவத்துறையின் நற்பெயரை காப்பாற்ற முடியும்” என்கின்றனர்.


இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதியிடம் போனில் தொடர்பு கொண்டபோது, “இந்த மருத்துவமனையில்  யார்-யார் வந்து செல்கிறார்கள், இதுபோன்று மதுபாட்டில்கள் எப்படி வந்தன என்று தெரியவில்லை அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் பின் அந்த தகவலை மேலிடத்திற்கு அனுப்பி வைப்போம்” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | போராட்டக்காரர்களுக்கு சாலை ஓரத்தில் இடம் ஒதுக்கிய ஒரே முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR