பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சாலையில் இருந்த 8 அடி நல்ல பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் என்றால் படையே நடுங்கும். ஆனால், புதுச்சேரி வாலிபர், நான் அஞ்ச மாட்டேன் என நிரூபித்து பாராட்டை பெற்று வருகிறார். புதுச்சேரி உப்பளம் பகுதி எப்போதும் பொதுமக்கள் போக்குவரத்து உள்ள பகுதி. இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் சமூக சேவகர் சுனில் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி நகர பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது உப்பளம் சாலையில் எட்டடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்று கொண்டிருந்தது.


ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!


வீடியோவை (Viral Video) இங்கே காணலாம்: 


 



 



உடனடியாக இதனை அறிந்த சுனில் அவர்கள் அதனை பிடித்து வனத்துறையிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வகையில் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த சமூக சேவகரை வனத்துறை ஊழியர்கள் பாராட்டினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR