பகல் முழுவதும் பரபரப்பாக காணப்படும் சென்னை மாநகரம் தூங்க சென்றப்பிறகு.., நீலம் மற்றும் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து சாலைகளை சுத்தம் செய்யும் பெண்களை பார்த்திருப்போம். ஒரு நாள் முழுவதும் நாம் வீசி எரியும் குப்பைகளையும், மரச்சப்பல்களையும், வாரி பெருக்கி, தூய்மையாக்கி, காலையில் நாம் பயணிக்க அந்த பாதையை பளபளக்கச் செய்யும் தூய்மை பணியாளர்களாக உள்ள அந்த பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெரினா கடற்கரை சாலையில் இரவு 9 மணிக்கு பெண்கள் சிலர் வரிசையாக சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் குறைந்தபட்ச இடைவெளி விட்டு இரண்டு பேராக பிரிந்து சாலையை சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். இரவு நேரங்களில் தூக்கத்தை இழந்து சாலையோர விளக்குகளின் வெளிச்சத்தில் பணியாற்றும் அவர்களிடம் பேச முற்பட்டோம். அப்போது, அதில் சிலர் உங்களிடம் பேசிக்கொண்டு இருந்தால் எங்கள் வேலை நடக்காது என்ற சிறிய சீற்றத்தோட தங்கள் பணியின் மீதான கடமையை உணர்ந்து வேலை செய்துகொண்டு இருந்தார்கள்.


மேலும் படிக்க  | 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி : தமிழகத்திற்கு பெருமை..!


அவர்களிடம் பணிவாக அக்கா உங்கள் வேலையை நீங்கள் செய்துகொண்டே என்னோடு பேசினால் போதும் என்று சொன்ன பிறகு.., சிறித்துக்கொண்டே பேசின ராஜேஷ்வரி அக்கா.., எங்கள் நிலையை கேட்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என ஏதோ ஒரு வேதனையை உள்வைத்துக்கொண்டு பேசத்தொடங்கினார். இதன் இடையே சைக்கிளில் ஒருவர் தேனீர் விற்று வரவே அவர்கள் 30 ரூபாய் கொடுத்து 3 டீ வாங்கி அதில் எனக்கும் ஒன்று கொடுத்தார்கள். அதை குடித்துக்கொண்டே அக்கா டீ கூட நீங்க காசு குடுத்துதான் வாங்கனுமா என்று கேட்டேன்.



அதற்கு ராஜேஷ்வரி அக்கா.., ஆமாம் டீயெல்லாம் நாங்கள்தான் வாங்கிக்கொள்ள வேண்டும். மாதம் 10500 ரூபாய் சம்பளம் வாங்குகிறோம். காண்ட்ரேக்டர்கள் மூலம் பணிக்கு வரும் எங்களுக்கு பணி பாதுகாப்பு என்பது கிடையாது. ஒரு நாள் வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளத்தை பிடித்துக்கொள்வார்கள். வீட்டு வாடகை, போக்கு வரத்து செலவு என மாதம் 5 ஆயிரத்தில் இருந்து 7 ஆயிரம் வரை சேலவாகி விடும். ரேசனில் கிடைக்கும் அரசி இல்லை என்றால் பல நேரங்களில் பட்டிணி கிடக்கவும் நேறிடும் என கனத்த இதயத்துடன் கூறினார். 


இரவு நேரங்களில் தனிமையில் ஆங்காங்கே பணியாற்றுகிறீர்களே உங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லையா என்று கேட்டபோது, சாலையோர தெரு நாய்கள்தான் எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளார்கள் என சொல்லி சிரிக்கும் முருகாத்தாள், பல நேரங்களில் மது போதையில் வரும் ஆண்கள் எங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே உள்ளார்கள் எனவும் அதே நேரம், எங்கள் உயர் அதிகாரிகள் இரவு முழுவதும் ரவுண்ட்ஸில் இருந்து எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் எனவும் அவர் கூறுகிறார்.


மேலும் படிக்க | இனி இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள்... சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு


பிஎஃப், இஎஸ்ஐ போன்றவைகளும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய முருகாத்தாள் இரவு தூக்கத்தை நாள் தோறும் இழந்து நீண்ட தூரம் நடந்தே சுத்தம் செய்யும் எங்களுக்கு எழும்பு தேய்மானம், கால் வலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாகவும் கூறுகிறார்.


கொரோனா காலகட்டத்திலும் கூட எங்கள் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாங்கள் பணியாற்றினோம் ஆனால் பேருந்துகளில் ஏறும்போதும் மக்கள் கூட்டம் உள்ள பகுதிகளுக்கு நாங்கள் செல்லும்போதும் பலர் எங்களை பார்த்து முகம் சுளிக்கும் நிலைதான் எங்களை வேதனைக்கு உள்ளாக்குகிறது எனக்கூறி அவரின் அழுகையை தொண்டைக் குழியோடு அடக்கினார் முருகாத்தாள். கண்கலங்கிய அந்த நொடியில் அவரின் அருகே சென்று சிறிதாக கட்டியனைத்து விடைபெற்றேன் அங்கிருந்து. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR