இனி இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள்... சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

மெட்ரோ ரயில் நாளை முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Mar 16, 2022, 08:00 PM IST
  • அனைத்து நாட்களிலும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு
  • ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 11 மணி வரை இயங்கும்

Trending Photos

இனி இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள்... சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு title=

சென்னையில் விமான நிலையம் - விம்கோ நகர் இடையிலும், சென்ட்ரல்  - பரங்கிமலை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சென்னையில் மெட்ரோ ரயில்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை முதல் அனைத்து  நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.  திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை, பயணிகள் நெரிசல் அதிகமுள்ள காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | நான்கு ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ திட்டம்

 

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Watch: இனி இந்த ஊரில் சைக்கிளுடன் Metro ரயிலில் பயணிக்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News