சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (29.11.2021) விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மதல் மிக கன மழையும் மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது மதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre) அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை வானிலை நிலவரம்: 


30.11.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது மதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


நாளை மறுநாள்: 


01.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை எட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


வியாழக்கிழமை வானிலை நிலவரம்:


02.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை உட்டிய உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


வெள்ளிக்கிழமை வானிலை நிலவரம்:


03.12.2021; தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது மதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் உரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


ALSO READ | Earthquake: வேலூர் அருகே மிதமான நிலநடுக்கம்


சென்னை வானிலை நிலவரம்:


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்ன. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும்..


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வங்க கடல் பகுதிகள்
இன்று (29.11.2021)  குமரிக்கடல் பகுதிகளில் கறாவளி காற்று மணிக்கு 40 மதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல நாளை (30.11.2021) தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய கறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பாதி உருவாக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்க திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பாதியில் கறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும்.


அதேபோல 01.12.2021 அன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் கறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ALSO READ | தள்ளாத வயதிலும் டைவ் அடித்து நீச்சல் கற்றுதரும் 85 வயது பாட்டி!


அரபிக்கடல் பகுதிகள்:
இன்று (29.11 2021) தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகதிகள் மற்றும் லட்சத்தீவு பாகுதிகளில் கறாவளி காற்று மணிக்கு 40 மதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (Rainfall Status) அளவு (சென்டிமீட்டரில்):


கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம், சிவலோகம் தலா 17


கன்னியாகுமரி 16, 


களியல் (கன்னியாகுமரி) 14, 


சிற்றாறு (கன்னியாகுமரி) 13,


ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 12, 


புதுச்சேரி, தக்கலை (கன்னியாமைரி), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 11, 


குழித்துறை (கன்னியாகுமரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு, வல்லம் (விழுப்புரம்), எடிதாங்கி (கடலூர்), வானமாதேவி (கடலூர்) தலா 10, 


ALSO READ | ’நீருக்கு தெரியாது உறவின் வலி’ ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR