கடலூர் மாவட்டம், ராசாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். அவரின் 20 வயதான மகன் பாலாஜி கடலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் அவிஷேஷூக்கு 17 வயதாகிறது. அவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் ஒரே ஊர் என்பதால், விடுமுறை நாளான சனிக்கிழமை, அப்பகுதியில் இருக்கும் மலட்டாறுக்கு குளிக்கச் சென்றனர்.
ALSO READ பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; கராத்தே மாஸ்டர், பள்ளி தாளாளர் கைது
ஆற்றில் நீர் வேகமாகவும், அதிகளவில் சென்று கொண்டிருந்த நிலையில், இருவரும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினர். மாணவர்கள் இருவரும் ஆற்றில் மூழ்கியது அறிந்தவுடன் ஊர் மக்கள் அனைவரும் ஆற்றுப் பகுதியில் திரண்டனர். தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீரில் மூழ்கிய மாணவர்களின் சடலங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் மாணவர்களின் சடலங்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. அப்போது, இருவரின் சடலமும் ஆற்று நீரில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாணவர்களின் இறப்பு குறித்து காவல்துறையும் வழக்குப்பதிவு செய்தது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் திரண்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவர்களின் உடலை பெறுவதற்காக கண்ணீர் மல்க காத்திருந்தனர்.
ALSO READ தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR