நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தங்க சாலையில் வசித்து வரும் பாப்பா (85) இந்தத் தள்ளாத வயதிலும் நூறு அடி கிணற்றில் டைவ் அடித்து நீச்சல் அடிக்கும் காட்சிகள் அந்தப் பகுதி மக்கள் வியந்து ரசித்து வருகின்றனர். மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவரிடம் நீச்சல் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.
ALSO READ ’மஞ்சப்பைக்கு’ மாறும் தமிழகம்- பிளாஸ்டிக்கை ஒழிக்க புது இயக்கம்
இதுகுறித்து அந்த பாட்டி கூறுகையில் தன்னுடைய அப்பாவிடமிருந்து அனைத்துவகை நீச்சலும் தான் கற்றுக் கொண்டதாகவும் இந்த தள்ளாத வயதிலும் இந்த கலையை இங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இளைஞர்களுக்கு நீச்சல் அடிக்க கற்று கொடுத்து வருவதாகவும், முன்பு போல் அதிகமாக கற்றுத்தர முடியவில்லை என்றாலும் இந்த வயதில் என்னால் முடிந்தவரை இளைஞர்களுக்கும் பெரியோர்களுக்கும் நீச்சல் கற்று தந்து வருகின்றேன்.
என்னுடைய மகள்,மகன் பேரன்,பேத்தி,கொள்ளுப் பேரன் என அனைவருக்கும் கற்றுக் கொடுத்ததை பார்த்த இந்த பகுதிவாழ் மக்கள் தங்களுக்கு இந்த கலையை கற்றுக் கொடுக்க வற்புறுத்தியதால் தற்போது இந்தக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறேன். நீச்சல் கலை என்பது அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த தள்ளாத வயதிலும் அனைவருக்கும் நீச்சல் கற்றுத் தருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதுகுறித்து அந்த பகுதி இளைஞர்கள், கூறுகையில் நாங்கள் நீச்சல் அடிக்க கற்றுக் கொண்டதே இந்த பாட்டி மூலமாகத்தான் இவ்வளவு வயது ஆனபோதிலும் நீச்சல் கலை மறக்காமல் உயரத்திலிருந்து குதித்து எங்களுக்கு குளிரையும் பொருட்படுத்தாமல் நீச்சல் பழகிய தருவார்கள் 85 வயது நிறைவுபெறும் நிலையில் இந்த கலையை மறக்காமல் இந்த பகுதி இளைஞர்களுக்கு நீச்சல் சொல்லித் தருகிறார்கள் என்றனர்.
ALSO READ ’நீருக்கு தெரியாது உறவின் வலி’ ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR