சென்னை: தென்கிழக்கு வங்காள விரிகுடா (South Bay of Bengal )மற்றும் அந்தமான் (Andaman) கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கி உள்ளது. இது மே 15 ஆம் தேதி முதல்  வங்காள விரிகுடா பகுதியில் மந்தநிலையாக வலுப்பெறும். ஒருநாள் கழித்து (மே 16) குறைந்த அழுத்தம் தொடர்ந்து வலுப்பெற்று சூறாவளியாக வளர்ச்சி அடையும் என சென்னை வானில ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் (Tammil Nadu) வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து 48 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி  ஆகிய மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும்  கன்னியாகுமரி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது .


சென்னை வானிலை:


அதேநேரத்தில் வட மற்றும் மத்திய தமிழகம் மாவட்டங்களான சேலம், தர்மபுரி, திருச்சி மற்றும் கரூர் போன்ற பகுதிகளில் வெயில் அதிக அளவில் இருக்கும் எனவும் சென்னை (Chennai) வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடன் இருக்கும். அங்கு 96.8 டிகிரி வெப்பம் வரை பதிவாகலாம் என்று அறிவித்துள்ளது.


சூறாவளி எச்சரிக்கை:


தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கி உள்ளதால், அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் சூறாவளியாக (Cyclonic Storm) மாற வாய்ப்பு உள்ளது. 


மே 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அதிக இடங்களில் மிதமான மழை பெய்யும். இந்த இரண்டு நாட்களில் அந்தமான் தீவுகளிலும் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் (The India Meteorological Department) தெரிவித்துள்ளது.


மே 15 ம் தேதி 45-55 கி.மீ வேகத்தில், 65 கி.மீ வேகத்தில், தெற்கிலும், மத்திய வங்காள விரிகுடாவிலும் அதிவேகமாக காற்று வீசக்கூடும் என்று ஐஎம்டி (IMD) எச்சரித்துள்ளது. காற்றின் வேகம் 55-65 கிமீ வேகத்தில் அதிகரிக்கும், 75 கிமீ வேகத்தில் வீசும், மே 16 க்குள். "காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும். அங்கு காற்றின் வேகமானது 65-75 கிமீ வேகத்தை தென்மேற்கில் 85 கிமீ வேகத்தில் எட்டும் என்று IMD கூறியுள்ளது.


இதனால் அந்த பகுதிகளில் உள்ள கடலோரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்பட்டு உள்ளது.


வானிலை முன்னறிவிப்பு:


தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய காலநிலை தொடங்கி உள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பலத்த மழை பெய்தது. தெலுங்கானா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திராவின் வானிலை வறண்டு இருந்தது.


கடலோர கர்நாடகா மற்றும் மத்திய மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும் தீவிர மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதே சமயம் மத்திய பிரதேசத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை நடவடிக்கைகள் மிதமாக இருந்தன.


தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு இந்தியாவின் வானிலை கிட்டத்தட்ட வறண்ட பூவாகவே இருக்கும் வடகிழக்கு இந்தியா பல இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.


வட இந்தியாவில், பஞ்சாப், டெல்லியின் ஹரியானா பகுதி, மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் வட ராஜஸ்தான் மீது இடியுடன் கூடிய மழை மற்றும் தூசி புயல் தொடரும்.