திராவிட மாடல் என்றால் என்ன?... பிரதமர் மேடையில் விளக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சமூக நீதி பெண்கள் முன்னேற்றம் சமத்துவம் இதுதான் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இதைத்தான் திராவிட மாடல் என்கிறோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி வீட்டு வசதி - நகர்ப்புறம் திட்டத்தில் சென்னையில் ரூ 116 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 1,152 வீடுகள் திறப்பு, மதுரை - தேனி இடையே ரூ 500 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 75 கி.மீ ரயில் பாதை திட்டம் தொடக்கம்,சென்னை - பெங்களூரு இடையே 262 கி.மீ தூரத்துக்கு 14, 870 கோடி ரூபாயில் அதிவிரைவு சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வந்தார்.
அவரை அமைச்சர்களும், ஆளுநரும் நேரில் சென்று வரவேற்றனர். இதனையடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சென்ற பிரதமர் மோடி மக்கள் நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்கவும் செய்தார். இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுக ஆட்சி அமைத்தவுடன் பிரதமர் பங்கேற்கும் முதல் விழா இது. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தந்துள்ள பிரதமருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன
இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானது. எனவே தமிழகத்திற்கு ஒன்றிய அரசு அதிக நிதியை கொடுக்க வேண்டும். சமூக நீதி பெண்கள் முன்னேற்றம் சமத்துவம் இதுதான் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இதைத்தான் திராவிட மாடல் என்கிறோம்.
கச்சத்தீவினை மீட்டெடுத்து பாரம்பரிய மீன்பிடி மக்களின் உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம். 14006 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை விரைந்து தர வேண்டும். ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தர வேண்டும் என்று வற்புறுத்தி கேட்கிறேன்.
மேலும் படிக்க | பிரதமருக்கு காவி குடை பிடிக்கும் திமுக?
தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதனை உடனடியாக பரிசீலிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளில் உள்ள நியாத்தை பிரதமர் உணர்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
மேலும் படிக்க | LIVE: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR