கொரோனா விவகாரத்தில் யார் அரசியல் செய்தாலும் மக்களால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா விவகாரத்தில் யார் அரசியல் செய்தாலும் மக்களால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சூழலை பொறுத்து உரிய நேரத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை முழுவதும் உள்ள 8 லட்சம் முதியவர்கள் சிறப்பு கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை எப்படி மறைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள ஜெயக்குமார், மக்களை திசை திருப்புவது திமுக தலைவர் ஸ்டாலினின் கை வந்த கலை என குற்றம் சாட்டினார். 


இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்..... “சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சிறப்பான முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசின் சிறப்பான சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். மேலும், நிர்வாக நடவடிக்கை காரணமாகவே சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


READ | GST தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் இருக்காது: நிர்மலா சீதாராமன்


சென்னையில் 14,000 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். நமது மருத்துவர்கள் குணப்படுத்தும் விஷயத்தில் உயிரைக் கொடுத்துப் பாதுகாக்கின்றனர். மொத்த சதவீதத்தில் பார்த்தால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 55 சதவீதமாக உள்ளது. இந்த நேரத்தில் அவதூறு பரப்புவதில் எதிர்க்கட்சி குறிப்பாக எதிரிக்கட்சியாக இருக்கும் ஸ்டாலின் முனைப்பாக இருக்கிறார்.


கொரோனா மரணங்களை மறைக்கவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இங்கு நெடுஞ்செழியன் காலனியிலேயே ஒருவர் இறந்துவிட்டார். அதை மறைக்க முடியுமா? இறந்தவர்களை அடக்கம் செய்ய அதற்குரிய வழிவகைகள் உள்ளன. எப்படி மறைக்க முடியும். ஆகவே அது தவறான தகவல்” என அவர் தெரிவித்துள்ளார்.