என்கவுண்டர் பயம்.. பாதுகாப்பு கேட்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி பொன்னை பாலு
Armstrong Murder Case latest Update : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரபல ரவுடி பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
Armstrong Murder Case Rowdy Ponnai Balu wife plea : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த ஆண்டு சென்னையில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலையில் கைது செய்யப்பட்டிருந்த ரவுடி திருவேங்கடம் நேற்று என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், தனது கணவரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொன்னை பாலுவின் மனைவி மனு அளித்துள்ளார். இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்கும் இன்னும் சிலரும் என்கவுண்டர் செய்யப்படலாம் என்ற தகவல் பரவிய நிலையில், பொன்னை பாலுவின் மனைவி அவசர அவசரமாக இந்த மனுவை கொடுத்திருக்கிறார்.
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை முதன்முதலாக வெட்டினார். இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியில் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட விசாரணையில் ரவுடி திருவேங்கடம் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டதும், திட்டத்தை கச்சிதமாக வகுத்து கொடுத்ததும் காவல்துறைக்கு தெரியவந்தது. இவர் ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி தென்னரசு கொலை வழக்கிலும் தொடர்புடையவராக இருந்திருக்கிறார்.
இவரை வைத்து கச்சிதமாக திட்டம் போட்ட கும்பல், கொலைக்கு முன்னதாக 10 நாட்களுக்கும் மேலாக ஆம்ஸ்ட்ராங் வசித்து வரும் பெரம்பூர் பகுதியில் முகாமிட்டிருந்திருக்கின்றனர். அவர் தனியாக இருக்கும் நேரம், வீட்டுக்கு வந்து செல்வது, வீட்டு வேலை நடக்கும் இடம் என எல்லா இடங்களையும் சல்லடைப்போட்டு தெரிந்து கொண்ட இந்த கும்பல், கொலைக்கான நாளையும் குறித்தது. பெரம்பூர் பகுதியில் உணவு டெலிவரி செய்யும் நபர்களின் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அவர்களைப் போல் வேஷமிட்டு கொலையை அரங்கேற்றலாம் என்றும் ரவுடி திருவேங்கடம் திட்டம் வகுத்தார். அவர் போட்டுக் கொடுத்த பிளான்படியே ஆம்ஸ்ட்ராங் கொலையும் நடந்தது.
மேலும் படிக்க | ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?
இந்த சம்பவம் தமிழக காவல்துறைக்கு மிகப்பெரிய கெட்டப்பெயரை பெற்றுக்கொடுத்துவிட்டதால், முதலமைச்சரே நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்துடன் சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆணையர் ஆகியோர் உடனடியாக மாற்றப்பட்டு, அருண் ஐபிஎஸ், டேவிட்சன் ஆகியோர் அந்தந்த பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர். இந்த அதிரடி மாற்றங்களுக்குப் பிறகு மாதவரம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம் தப்பியோட முயற்சிக்கும்போது என்கவுண்டர் செய்யப்பட்டார். அவரைப்போல இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிலருக்கும் இந்த கதி ஏற்படலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், சிறையில் அச்சத்தில் இருக்கும் ரவுடிகள் தங்களின் உயிருக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு குடும்பத்தினரிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரவுடி பொன்னை பாலு மனைவி, மனு கொடுத்திருக்கிறார்.
மேலும் படிக்க | புதுக்கோட்டை : என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி குடும்பத்தின் பகீர் புகார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ