Armstrong murder CCTV : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இம்மாதம் 5 ஆம் தேதி ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பே மர்ம நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் கொலையாளிகள் 11 பேர் சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டனர். இந்த செய்தி தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் தீயாக பரவ தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தேசிய அளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் இந்த படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் சட்டம் ஒழுங்கு கவலையளிக்கும் விதமாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரே விமர்சித்தனர். இதனால் கடும் கோபமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றவாளிகளை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையிலான காவல்துறை, கைது செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு நேரடியாக களத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருக்கிறார். அவருடன் ரவுடிகள் திருவேங்கடம், சந்தோஷ், செல்வராஜ், திருமலை உள்ளிட்டோர் இந்த கொலையில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. இருப்பினும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னணியில் பல்வேறு சம்பவங்கள் இருப்பதாக காவல்துறை சந்தேகித்ததால் கைது செய்யப்பட்டவர்களிடம் கொலைக்குப் பயன்படுத்திய கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்த தகவலையும், ஸ்கெட்ச் போட்ட இடம் குறித்தும் விசாரணை நடத்தினர்.
அதில் ரவுடி திருவேங்கடம் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டார். அவர் தான் ஆம்ஸ்ட்ராங்கை முதன்முதலாக வெட்டி கொலை செய்தது இப்போது வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சியில் தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே ஆம்ஸ்டராங் நண்பர் மற்றும் அவரது சகோதரர் கொலை வழக்கிலும் தொடர்புடையவர் என்பது காவல்துறை விசாரணையிலும் தெரியவந்திருக்கிறது. இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படும் வீடியோவை பார்த்து அவரது ஆதரவாளர்கள் திகைப்படைந்துள்ளனர்.
மேலும் படிக்க | என்கவுன்டரில் சந்தேகம்...!! கைவிலங்கு போடாதது ஏன்...? - ஈபிஎஸ் பரபரப்பு கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ