Gangster Duraisamy encounter in Pudukottai : பிரபல ரவுடி என்கவுண்டர்
புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரைசாமியை போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனர். ரவுடி துரைசாமி திருச்சி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர். இவர் மீது மீது ஐந்து கொலை வழக்கும் மற்றும் 60க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளது. இந்நிலையில் கடந்த 12-12-2022 ஆம் ஆண்டு இளவரசன் என்ற ரவுடியை புதுக்கோட்டை புதுகுளம் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் துரைசாமி முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது. அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் காட்டுப்பகுதியில் ஒருவர் அருவால் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாகவும் தெரிவித்துள்ளனர்.
காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல்
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில், உதவி ஆய்வாளர் மகாலிங்கம் உள்பட 4 போலீசார் திருவரங்குளம் காட்டு பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீசாரை பார்த்து துரைசாமி தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை வெட்டி உள்ளார். இதில் மகாலிங்கத்திற்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, தற்போது அவர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எச்சரிக்கையை மீறிய ரவுடி
அத்துடன் பிரபல ரவுடி துரைசாமிபோலீசாரை தாக்கி விட்டு தப்பிக்கவும் முயற்சி செய்திருக்கிறார். அப்போது, போலீசார் முதல் ரவுண்டு எச்சரிக்கையாக வானத்தை நோக்கி சுட்டனர். அதையும் மீறி அவர் மேலும் போலீசாரை தாக்க முற்பட்டதால் அடுத்த இரண்டு ரவுண்டு துரைசாமி மீது போலீசார் சுட்டனர். இதில் பிரபல ரவுடி துரைசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
குடும்பத்தினர் காவல்துறை மீது குற்றச்சாட்டு
இதையடுத்து சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி துரைசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, ரவுடி துரைசாமி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி, நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டையில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, பேட்டியளித்த ரவுடி துரைசாமி குடும்பத்தினர், தனது மகனை வேண்டுமென்றே காவல்துறையினர் கொன்றுவிட்டனர் என குற்றம்சாட்டினர்.
மேலும் படிக்க | கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ