தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே உள்ள இலங்கை நிர்வகித்து வரும் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தில் இன்று திருவிழா தொடங்கிய நிலையில், இலங்கை சிறையில் மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை தமிழ்நாட்டு மீனவர்கள் புறக்கணித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கச்சத்தீவு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் நிலையில், இரு நாட்டு மீனவர்களும் பல்லாயிரக்கணக்கில் இந்த திருவிழாவில் பங்கேற்பார்கள். இந்த ஆண்டும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க பல மீனவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் இலங்கை நீதிமன்றம்,ராமேஸ்வரம் மீனவர்களை தொடர்ந்து சிறைகளில் அடைத்து வருகிறது. இதனால் மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.


கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய உற்சவம்


வரலாற்று சிறப்பு மிக்க கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான உற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்த பெருவிழாவின் பிரதான ஆராதனை யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஜஸ்டின் ஞானப் பிரகாசம் தலைமையில் நாளை காலை காலை இடம் பெற இருக்கின்றது.  அதே சமயத்தில் பக்தர்களின் நலன் கருதி உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளன.


கச்சதீவு திருவிழாவிற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள்


இதில் சுகாதாரம் மற்றும் குடி தண்ணீர் வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள், சாலைகள், இறங்கு துறைகள் மற்றும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல்ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று, வருடாந்த திரு விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக உயிர்காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவ குழுக்களை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருகின்றனர்.


பாரம்பரியமாக செய்யப்படும் கச்சதீவு திருவிழா


இந்திய, இலங்கை உறவினை பலப்படுத்தி இரு நாட்டு அரசுகள் மற்றும் மக்களை இணைக்கும் ஓர் அங்கமாக கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் காணப்படுகின்றது. இந்நிலையில்,  தமிழக விசைப் படகு மீனவர்கள் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்ற அதே நேரத்தில், நாட்டுப்படகு மீனவர்கள் "கச்சதீவு திருவிழா பாரம்பரியமாக செய்யப்படும் திருவிழா என்றும், வழிபாட்டியலை தக்க வைக்கும் நோக்கத்திலாவது குறித்த திருவிழாவுக்கு 17 நாட்டு படகில் 300 மீனவர்கள் அளவில் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது " எனவும் கூறியிருந்தனர்.


மேலும் படிக்க | அதிமுக துரோகிக்கு சிறை தண்டனை - எடப்பாடி பழனிசாமி அதிரடி!


தமிழக உறவுகளுக்காக தயார் நிலையில் இருந்த சுங்கம்  திணைக்களத்தினர்


தமிழக உறவுகளுக்காக சுங்கம்  திணைக்களத்தினர் தயார் நிலையில் இருந்தனர். இந்த நிலையில் இதுவரை தமிழகத்திலிருந்து யாரும் வரவல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளையில் எல்லை தாண்டிய மீன்பிடி குற்றச்சாட்டில் கைதாகி கடந்த 17ம்  தேதி முதல் இலங்கை சிறையில் அடைக்கப்படடிருக்கும் தமிழக மீனவர்கள் ஐவரையும் விடுவிக்குமாறு கோரி இன்றைய தினம் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் தமிழக மீனவர்கள் காலவரையற்ற சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். 


கச்சதீவு புனித ஆலய திருவிழாவை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்த இராமேஸ்வரம் வேற்காடு பங்கு தந்தை


இதே வேளையில் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இராமேஸ்வரம் வேற்காடு பங்கு தந்தை சந்தியாகு அவர்கள் மீனவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து கச்சதீவு புனித ஆலய திருவிழாவை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாக இருந்து வந்த நிலையில், 1974ம் ஆண்டு மத்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. இதனால் தமிழக மீனவர்கள் இன்று வரை பெரும் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | TVK: மதுரையில் முதல் மாநாடா...? உடனே கிளம்பிய புஸ்ஸி ஆனந்த் - ரியாக்சன் இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ