தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை 11-ம் தேதி அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரளவு மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் பலத்த மழையைக் கொண்டு வந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை... விஜய் மீது உதயநிதி அட்டாக் - ஆதவ் அர்ஜூனாவுக்கும் பதிலடி


தற்போது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் அந்த பகுதிகளில் டிசம்பர் 10ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். வங்காள விரிகுடாவில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் 9ம் தேதி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். அதன்பிறகு டிசம்பர் 10-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் போன்ற இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது


டிசம்பர் 11ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை போன்ற சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும், மேலும் நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பிற பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 12ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போன்ற சில இடங்களில், வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்யும்.


டிசம்பர் 13-ம் தேதி தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.


மழை குறித்து வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கூறியதாவது, தமிழகத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மழை பெய்யக்கூடும். வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறலாம், ஆனால் அது "ஃபெஞ்சல்" போன்ற பெரிய புயலாக மாற வாய்ப்பில்லை, அது நீண்ட காலம் நீடிக்காது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் வரை தொடர்ந்து மழை பெய்யும். இந்த ஆண்டு சென்னையில் சுமார் 100 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும். தமிழகத்தில் மொத்த மழை 500 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர் அன்பில் மகேஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ