திருவொற்றியூர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வைரல்! கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
Arrested For Threatening :
சென்னை திருவொற்றியூரில் ரியல் எஸ்டேட் ஊழியரிடம் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட ரவுடிகள் இருவரை ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில், இன்ஸ்ட்டாவில் திருவொற்றியூர் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சரித்திர பதிவேடு குற்றவாளியும் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், தலைமறைவான சரித்திர பதிவேடு ரவுடி இன்ஸ்டாகிராமில் திருவொற்றியூர் போலீசாரை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற ரவுடியை போலீசார் எழும்பூர் ரயில் நிலையத்தில் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் NTO குப்பத்தை சேர்ந்தவர் ஆகாஷ், இவர் ரியல் எஸ்டேட்டில் தொழில் செய்து வருகிறார். கடந்த மே மாதம் காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரிஷி கண்ணன் 50,000 பணத்தை ஆகாஷ் என்பவரிடம் வாங்கி வரும்படி காசிமேட்டை சேர்ந்த ரவுடி தேசப்பன் தருண் இருவரை அனுப்பி உள்ளார்.
மேலும் படிக்க | “பொய் பிரச்சாரம்” திமுக-வை கலாய்த்தாரா விஜய்?!
ஆகாஷிடம் ரிஷி கண்ணா 50,000 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி வரும்படி கூறியதாக கூறினார். பணம் கொடுக்க முடியாது என்று கூறியதால் தேசப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ஆகாஷிடம் மணிபர்ஸ் செல்போன் பறித்து கொண்டு இருவரும் தப்பி ஒட்டம் பிடித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆகாஷ் திருவொற்றியூர் குற்றவியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரி பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆணையர் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ரவுடி தேசப்பன், மற்றும் தருன் ஆகிய இருவரை போலீசார் கைதுசெய்தது.
கைது செய்தவரிடமிருந்த மணிபர்ஸ் செல்போன், ATM கார்டுகளை பறிமுதல் செய்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி ரிஷிகண்ணாவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA! புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!
தனிப்படை போலீசார் தன்னை தேடி வருவதாக அறிந்த ரிஷி கண்ணா இன்ஸ்டாகிராமில் திருவொற்றியூர் போலீசாரை ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில், போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்ற தனிப்படை போலீசார், வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற ரிஷிகண்ணாவை மடக்கிப்பிடித்து கைது செய்து காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து பாத்ரூமில் வழுக்கி விழுந்த ரிஷிகண்ணாவை போலீசார் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ