பேட்டியில் விஜய் படத்தை காட்டிய இளைஞர் - வானதி ஸ்ரீனிவான் சொன்ன பதில்!
Vanathi Srinivasan: தங்கள் பின்னால் வந்து புகைப்படத்தை காட்டும் அளவுக்கு பாஜக கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கிறது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.
கோவை வ உ சி பூங்கா அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட விலையில்லா சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் இயந்திரத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்ளை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், வ உ சி பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் பணம் கொடுத்து சுத்தமான ஆர்.ஓ குடிநீர் வாங்க வேண்டியது இல்லை, வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் இந்த விலையில்லா குடிநீர் வசதி இருக்கும் என தெரிவித்தார். மேலும் ராமநாதபுரம் பகுதியில் குடிநீர் ஏடிஎம் அமைப்பதற்கு சி எஸ் ஆர் நிதி வாங்கி இருப்பதாக குறிப்பிட்டவர் அந்த பகுதியில் மாநகராட்சி கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மாற்று இடத்தில் வைக்குமாறு கூறுவதன் காரணமாக , பணிகள் தாமதமாகியிருப்பதாகவும் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் பேசி இருப்பதாகவும் அவர் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | பெண் பிள்ளைகளின் வாழ்வில் ஒளியேற்றும் புதுமைப் பெண் திட்டம் - சாதனை விவரம்
இந்த மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் அழைத்துவரப்பட்டு கைது செய்யப்பட்ட தொடர்பான கேள்விக்கு, கல்லூரி மாணவர்கள் எந்த இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவிப்பது தவறில்லை எனவும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்கள் எனவும் அவர்கள் எந்த இடத்திலும் போராட்டத்தில் கலந்து கொள்வது அவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றார். இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் நிபாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு, தமிழ்நாட்டில் ஒரு அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிடுவோர் கைது செய்யப்படுவது புதிது அல்ல, பாஜகவிலும் கூட ஒரு பதேவை செய்தற்கு விடிய விடிய இருந்து கைது செய்யப்பட்டு சென்றதையும் பார்த்திருப்பதாகவும் இன்னும் அதைத் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆகவே கருத்து கருத்த சுதந்திரம் என்பதெல்லாம் திமுக அரசுக்கு எதிராக பதிவிடுவோர்களுக்கு கிடையாது எனவும் பாசிசம் என பேசும்போது திமுக அரசை எதற்காக மக்கள் விமர்சிக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியவர் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கே அவர்களுக்கு மனது கிடையாது எனவும் அரசியல் விமர்சகர் அல்லது ஒரு இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக ஒரு கருத்து பதிவிட்டாலோ அல்லது ஒரு லைக் போட்டாலோ கைது செய்யப்பட்டு வருகிறார்கள் எனவும் மற்றொருபுறம் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், அரசு மருத்துவமனை மீது தாக்குதல் நடக்கும், மற்றவர்கள் மீது நடக்கும் என விமர்சித்தவர் நடக்கின்ற அரசு இரட்டை நிலைப்பாடு கொண்ட அரசு எனவும் அரசு சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதை விட்டுவிட்டு, யாரெல்லாம் எதிர்ப்பாக இருக்கிறார்களோ அவர்களை கைது செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என சாடினார்.
சட்டம் அனுமதித்துள்ள அளவுக்கு கருத்து சுதந்திரம் இந்த அரசு கொடுத்துள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள வானதி சீனிவாசன், பிரதமர் விமர்சிப்பவர்கள் பாஜக தலைவர்களை பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நடுநிலை என சொல்லலாம் ஆனால் இந்த அரசுக்கு எதிராக வந்தால் மட்டும் நடவடிக்கை என்பது சரியில்லை எனவும் இந்த நாட்டில் சட்டம் இருக்கிறது சட்டத்துக்கு புறம்பாக யார் நடந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் இந்த அரசு அவர்களுக்கு ஆதரவானவர்களை விட்டு விடுகிறார்கள் தனக்கு எதிராக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதுதான் இந்த அரசின் பிரச்சனை என தெரிவித்தார். ஆளுநர் குறித்து முத்தரசனின் கருத்துக்கு, இவ்வாறு விமர்சிப்பது அரசியல் நாகரீகமா? கவர்னரை பார்த்து ஒரு அரசியல் கட்சித் தலைவர் பேச வேண்டிய பேச்சா இது? இதுதான் அரசியல் நாகரிகமா என கேள்வி எழுப்பினார்.
மேலும் பாரத் என்பது நமது அரசியல் சட்டத்தில் இருக்கிறது , அரசியல் சட்டத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு கட்சிகளுக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது கிடையாது எனவும் பாரதம் என்பது தான் நமது நாட்டின் பாரம்பரியமான பெயர், பாரத் என்பதுதான் நமது நாட்டின் பெயர் என தெரிவித்தார். சூலூர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது தொடர்பான கேள்விக்கு, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் விவசாயிகள் பாதிக்காத அளவுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வோம் என பதில் அளித்தார். செய்தியாளர் சந்திப்பின்போது விஜய் ரசிகர் வானதி சீனிவாசன் பின்னால் புகைப்படம் காட்டியது வைரலாகி வருவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் தங்கள் பின்னால் வந்து புகைப்படத்தை காட்டும் அளவுக்கு பாஜக கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கிறது எனவும் ட்ரோல், மீம்ஸ், காமெடி என எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் மற்றொரு கட்சியில் இது போன்று செய்ய முடியுமா? அப்போது யார் பாசிசம்? எங்கு சட்டம்? யார் கருத்து சுதந்திரம்? என்பது தெரியவரும் என பதில் அளித்தார்.
தவெக தலைவர் விஜய்க்கு தமிழகத்தில் அரசியல் முக்கியத்துவம் இருக்கிறதா என்பது தொடர்பான கேள்விக்கு, வழக்கமாக தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் மிகவும் நெருங்கி இருக்கக்கூடிய இடம், ஆக சினிமாவிலிருந்து யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் இடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் இதில் அனைவரும் வெற்றி பெற்று இருக்கிறார்களா என கேள்வி எழுப்பியவர் கட்சி ஆரம்பித்து காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள் எனவும் சினிமாவுக்கும் அரசியலுக்கும் நீண்ட காலத் தொடர்பு தமிழகத்தில் இருப்பதால் அது இயற்கை தான் என தெரிவித்தார். கஸ்தூரி விவகாரத்தில் யார் மணம் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார், அதன் பிறகும் அரசு அவரை கைது செய்திருக்கிறது, சட்டப்படியான நடவடிக்கைகளை கஸ்தூரி மேற்கொள்வார் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஆந்திராவில் கஸ்தூரி பதுங்கல்! விரைந்தது தனிப்படை...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ