Do you like Rajini or Kamal: உலக முழுவதும் 2020 ஆம் ஆண்டு மக்களுக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று 70 வயதாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இது ஒரு மைல்கல்லாகும். முன்னதாக ஆகஸ்ட் மாதத்துடன் திரையுலகில் 45 ஆண்டுகள் நிறைவு செய்தார். அவர் இறுதியாக தனது மிகவும் பிரபலமான மற்றும் நீண்ட காலமாக எதிர் பார்க்கப்பட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து இறுதி முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல ரஜினியும் அடுத்த வருடம் நடைபெற உள்ள மாநில சட்டசபைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ள நிலையில், இதுவரை சினிமாவின் எல்லைக்குள் ரஜினியை பார்த்த தமிழக மக்கள் மீண்டும் ஒரு முக்கியமான கேள்வியை எதிர்கொள்வார்கள் என்று தெரிகிறது. ரஜினிகாந்த் (Rajinikanth) புடிக்குமா? இல்ல கமல்ஹாசன் (Kamal Haasan) புடிக்குமா? அதாவது மக்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள் என்பது தான் கேள்வி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமல், ரஜினி இருவரும் பாலசந்தர் (K. Balachander) பள்ளியில் பயின்றவர்கள். 1979-ல் வெளிவந்த "நினைத்தாலே இனிக்கும்" (Ninaithale Inikkum) படத்துக்கு பிறகு அவர்கள் இருவரும் பரஸ்பரம் கலந்தாலோசித்து எடுத்த முடிவின்படி, இணைந்து நடிப்பதை தவிர்த்தார்கள். அதன் பிறகு இருவரும் தங்களது பாதைகளில் பயணித்து சினிமாவில் உச்சத்தை தொட்டார்கள். 


தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரங்களாக பல தசாப்தங்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் (Kamal Haasan) பயணம் செய்து வருகின்றனர். இருவரும் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களை விட தனது ஸ்டைலான பாணியை விரும்பினார். கமல்ஹாசன் ஸ்டைலான பாணியை விட பல்வேறு புதிய கதாபாத்திரங்கள் கொண்ட நடிப்புக்கு தீனி போடும் பாணியை தேர்வு செய்தார். இருவரும் உச்சத்தை தொட்டார்கள். வருமானமும் கொட்டியது.


ALSO READ |  நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்: கமல்!


அவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை (Tamil Cinema) மாநில எல்லைகளுக்கு அப்பால் எடுத்து சென்று, உலகளவில் இந்திய திரைப்படங்களுக்கு புதிய சந்தைகளைத் திறந்து வைத்தனர். உலகம் "தமிழ் சினிமா"வை (Tamil Cinema) கொண்டாட இருவரும் ஒரு காரணம். ஜப்பான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் ரஜினிக்கு என ரசிகர்கள் வட்டாரம் இருக்கின்றன. அதேநேரத்தில் கமல் படங்கள் ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவை என்று கருதப்பட்ட திரைப்படங்களை வழங்கினார். ஏழு கமல் படங்கள் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் (Oscars) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.


இருவரும் தங்கள் அரசியல் கருத்துக்களை பரப்புவதற்கு சினிமாவை பயன்படுத்தினர். இருப்பினும், அவர்கள் தங்கள் திரைப்படங்களில் அரசியல் பிரச்சினைகளை (Political Issues) எவ்வாறு எதிர் கொண்டார்கள் மற்றும் அது பொதுமக்களிடையே எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது.


ALSO READ |  திருவண்ணாமலையிலிருந்து போட்டியிடவுள்ளாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?


கமல் தனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே அரசியல் குறித்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் 1990-கள் வரை, ரஜினிகாந்த் தனது திரைப்படங்களில் அரசியல் பேசவில்லை. 1990-க்கு பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த நடிகர் ரஜினி, இயக்குனர் பி வாசுவின் இயக்கத்தில் 1990-ல் வெளியான பணக்காரன் (Panakkaran) படத்தில் பேசிய வசனம், பெரும் வரவேற்பை பெற்றது. "நான் நினைத்தால் தலைவன் இடத்துக்கு ரொம்ப சுலபமாக வர முடியம்" என்ற வசனம் தான், ரஜினியின் அரசியல் ஆசை வெளிப்படுத்துவதாக இருந்தது. அப்படி தான் அவரது ரசிகர்கள் நினைத்தார்கள். அங்கிருந்த ஆரம்பித்த அவரது அரசியல் வசனங்களின் பாத்திரம் "பாபா" (Baba) படத்தில் பெரும் உச்சத்தை தொட்டது. 


சமீபத்தில் நடிகர் ரஜினி வெளிப்படுத்திய "ஆன்மிக அரசியல், அவரது சின்னம், எனக்கு முதல்வர் பதவியின் மீது ஆசை இல்லை" போன்ற அவரது பேச்சுக்கள் பாபா படத்தை நினைவுப்படுத்துவதாக இருக்கும்.


ALSO READ |  Big Announcement Rajinikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன்ற தேர்தலில் போட்டி


இதற்கு நேர்மாறாக, 1980-ல் வெளியான "வறுமையின் நிறம் சிவப்பு" (Varumayin Niram Sivappu) படத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால் கமல்ஹாசன், ஒரு இலட்சிய மற்றும் நன்கு படிக்கும் இளைஞனாக பல நாட்கள் பசியுடன் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சத்யாவில் (1988) அரசியல்வாதிகள் இளைஞர்களை தங்கள் தனிப்பட்ட லாபங்களுக்காக எவ்வாறு தவறாக வழிநடத்துகிறார்கள் மற்றும் சுரண்டுகிறார்கள் என்பது பற்றி அவர் பேசியிருப்பார். தேவர் மகன் (1992) படத்தில் வன்முறை சாதி மோதல்கள் குறித்து பேசியிருப்பார். மகாநதியில் (1994) சமூகத்தின் அவலம், இந்தியன் (1996) படத்தில் இந்தியாவின் ஊழல் குறித்தும், ஹே ராம் (2000) படத்தில் சாதி வெறுப்பு அரசியல் பத்தி பேசியிருப்பார்.


ரஜினி பல படங்களில் அரசியலை வசனமாக பேசியுள்ளார். அதேநேரத்தில் கமல் தனது கதாபாத்திரங்கள் மூலம் பேசியிருக்கார். ஏற்கனவே ஒருவர் அரசியலில் நுழைந்து விட்டார். அடுத்தவர் இன்னும் சில நாட்களில் அடியெடுத்து வைக்க உள்ளார். இவர்களில் யாரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை அறிந்துக்கொள்ள இன்னும் சில மாதங்களில் காத்திருக்க வேண்டும்.


ALSO READ |  ரஜினியின் கனவு வெற்றி பெறுமா? அரசியலில் நுழைந்து தமிழக முதல்வரான 4 திரைப்பட நட்சத்திரங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR