தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவர் ஜோசியம் பார்த்து வருகிறார். மேலும் youtube சேனல் ஒன்றும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோசியர் பாலசுப்பிரமணியம், இவரது மனைவி பாண்டியம்மாள், மகன் அய்யாதுரை ஆகிய மூவரும் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜோசியம் பார்ப்பதாக விளம்பரம் செய்துள்ளார்.


மேலும் படிக்க | Weight Control Tips: உடல் எடையை குறைக்க 5 நிமிட உடற்பயிற்சி 


இதை நம்பி வெள்ளம் பட்டி கிராமத்தை சேர்ந்த திருமலைசாமி, பாலமுருகன், மாரியம்மாள், உள்ளிட்ட மக்கள் பலர் இவரிடம் ஜோசியம் பார்த்து உள்ளனர். அப்போது அவர் தான் நடத்தும் யூடியூப் சேனலை மக்களிடம் காமித்து நீங்கள் தங்களிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.


இதை நம்பி அந்த மக்கள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்துள்ளனர் பணத்தை பெற்றுக் கொண்ட ஜோசியர் பாலசுப்பிரமணியன் அங்கிருந்து  தனது சொந்த ஊரான புங்கவர் நத்தம் வந்துள்ளார். பணம் கொடுத்த யாருக்கும் திரும்பி பணம் கொடுக்காததால் ஒரு ஆண்டாக பணத்தை திருப்பி கொடுக்காமல் அளக்களித்துள்ளார். 


பணத்தை கண்டிப்பாக தரவேண்டும் என கேட்ட  கிராம மக்களை,  பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக ஜோசியர் பாலசுப்பிரமணியம் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


அந்த மனுவில், தாங்கள் கூலி வேலை செய்து வருவதாகவும், தாங்கள் பணம் கொடுத்தால் இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தங்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஜோசியர் மோசடி செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஜோசியர் பாலசுப்பிரமணியனை கைது செய்து தங்களின் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என கேட்டு கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர் தங்களுக்கு மை தடவி தங்களை வசியம் செய்து விட்டார் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


மேலும் படிக்க | இந்த 3 வீட்டு வைத்தியத்தால் உங்களின் வெள்ளை முடி கருப்பாகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ