அதிகளவில் விற்பனையாகும் 5ஜி போன்கள்! 4ஜி போன்கள் நிறுத்தம்?
உலகளவில் 5ஜி தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்ற நாடுகளை விட சீனா தான் முதலிடம் வகிப்பதாக அறிக்கை கூறப்படுகிறது.
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் சமீபத்திய அறிக்கைபடி, ஜனவரியில் முதல்முறையாக 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனையானது 4ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனையை மிஞ்சியுள்ளது. சீனா 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் 84 சதவிகிதம் உள்ளது, அதேபோல 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகியவை முறையே 73 சதவிகிதம் மற்றும் 76 சதவிகிதம் உள்ளது. 5ஜி தொழில்நுட்பம் சீனாவில் வளர்ச்சியடைய சீன டெலிகாம் ஆபரேட்டர்களின் ஆதரவும், அசல் உபகரண உற்பத்தியாளர்களால் (ஓஇஎம்எஸ்) விநியோகமும் தான் உறுதுணையாக இருந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. ஐபோன் 12 சீரிஸுடன் தனது 5ஜி யை தொடங்கிய ஆப்பிள், வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் சிறந்த விற்பனையை செய்தது.
மேலும் படிக்க | iPhone tips and tricks: ஐபோனை மீட்டமைக்கும் எளிய வழிமுறை
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் குளோபல் மன்த்லி ஹேண்ட்செட் மாடல்ஸ் சேல்ஸ் ட்ராக்கர் அறிக்கையின்படி, உலகளவில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனையானது ஜனவரி 2022-ல் 51 சதவீதத்தை எட்டியது, இது முதல் முறையாக 4G ஸ்மார்ட்போன்களின் விற்பனையை மிஞ்சியுள்ளது. உலகிலேயே அதிகமாக 84 சதவீத விற்பனை வீதத்துடன் முன்னணி வகிப்பது சீனா தான், ஆப்பிள் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் முறையே 50 சதவீதம் மற்றும் 30 சதவீதம் பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2021-ல் வெளியிடப்பட்ட ஐபோன் 13 சீரிஸ் தான் 5ஜி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குவால்காம் மற்றும் மீடியா டெக் போன்ற நிறுவனங்கள் வழங்கும் குறைந்த விலை சிப்செட்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்ததற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று கவுண்டர்பாயின்ட் கூறுகிறது. ஆண்ட்ராய்டு 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலைக் குறைப்பின் மூலம் ஜனவரி மாதத்தில் இதன் விற்பனை ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 5ஜி போன்கள் ரூ. 18,900 முதல் ரூ. 30,000 வரை அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது ரூ. 11,300 முதல் ரூ. 18,900 வரை கிடைக்கின்றன.
இனிவரும் காலங்களில் ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற இடங்களில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் கிட்டத்தட்ட ரூ. 11,300 விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கவுண்டர்பாயிண்ட் கூறுகையில், சந்தையில் குறைந்த விலை 5ஜி எஸ்ஓசி ஆனது தோராயமாக ரூ. 1,500க்கு 5ஜி ஸ்மார்ட்போன்களை வழங்கும் என்று கூறுகிறது.
மேலும் படிக்க | முகக்கவசம் அணிந்திருக்கும் போது போனை அன்லாக் செய்வது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR