ஸ்கூட்டர் அல்லது பைக் மைலேஜ் என்பது பைக் ஓட்டுபவர்களுக்கு இன்றியமையாத காரணி. தினமும் ஸ்கூட்டர் ஓட்ட வேண்டிய தேவை இருப்பவர்கள் சிறந்த மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டியை தேர்வு செய்கிறார்கள். அதேநேரத்தில் நல்ல மைலேஜ் தரும் வாகனம் என வாங்கும் ஸ்கூட்டி கூட திடீரென குறைவான மைலேஜ் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதனை கட்டாயம் சரிசெய்தாக வேண்டும். அதனை எப்படி சரி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம். இரு சக்கர வாகனங்களை கவனமாகக் கையாண்டால் சிறந்த மைலேஜ் தரும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. ஹெவி கியர் ஷிஃப்டிங்கைத் தவிர்க்கவும்


பைக் மைலேஜை அதிகரிக்க ஹெவி கியர் ஷிஃப்டிங்கைத் தவிர்க்கவும். கியர் மாற்றும் போது, ​​வேகமாக அல்லது அழுத்தமாக மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் கிளட்ச் பேட் சேதமாகும். கியர்களை சீராகவும் சரியான நேரத்திலும் மாற்றுவது பைக்கின் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்த உதவும். அடிக்கடி கியர் மாற்றிக் கொண்டே இருக்கக்கூடாது.


மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் ஸ்லோவா இருக்கா? சூப்பர் ஃபாஸ்ட் ஆக இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க


2. பைக் சர்வீசிங்


எளிதாக மைலேஜ் பெற, ஒருவர் தங்கள் பைக்குகளுக்கு அடிக்கடி சர்வீஸ் செய்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சர்வீசிங், மைலேஜையும் ஒட்டுமொத்த பைக்கின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது. சர்வீஸ் செய்வது பைக்கின் இன்ஜின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உங்கள் பைக் அல்லது ஸ்கூட்டரின் ஆயுளையும் அதிகரிக்கிறது.


3. சிறந்த ஓட்டுநர் பயிற்சிகள்


வண்டியை இயக்கும்போது சீரான வேகத்தில் எப்போதும் இயக்க வேண்டும். அதிக வேகம், திடீர் பிரேக்கிங் ஆகியவை மைலேஜ் கொடுப்பதை நேரடியாக பாதிக்கும். எனவே வண்டியை சிறந்த முறையில் இயக்குவது அவசியம்.


4. என்ஜின் ஆயிலை மாற்றுதல்


பைக் மைலேஜை அதிகரிக்க என்ஜின் ஆயிலை மாற்றுவது அவசியம். பைக்கின் எஞ்சின் ஆயில் பைக்கின் மற்ற பாகங்களின் மென்மையை தக்க வைக்கிறது. வருடத்திற்கு மூன்று முறையாவது என்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும். ஒருவர் சரியான நேரத்தில் அதை மாற்றவில்லை என்றால், அது கார்பன் வைப்பு காரணமாக பைக்கின் மற்ற பாகங்களில் துருப்பிடிக்கக்கூடும்.


5. டிராஃபிக்கில் என்ஜினை ஆஃப் செய்தல்


பைக் மைலேஜை அதிகரிக்க டிராஃபிக்கில் இன்ஜினை ஆஃப் செய்வது ஒரு நல்ல டிப்ஸ். போக்குவரத்து நெரிசலில் ஒரு நபர் தனது இயந்திரத்தை நீண்ட நேரம் இயங்க விடக்கூடாது; அதற்கு பதிலாக, பைக் மைலேஜ் அதிகரிக்க வண்டியை ஆப் செய்துவிடுங்கள்


6. சூரிய ஒளியில் நிறுத்த வேண்டாம்


பைக் மைலேஜை அதிகரிக்க சூரிய ஒளியில் நிறுத்த வேண்டாம். ஒரு நபர் தனது பைக்கை நேரடியாக சூரிய ஒளியில் அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது. சூரிய ஒளி எரிபொருளை விரைவாக எரிக்கச் செய்கிறது. மேலும் அது இறுதியில் மைலேஜைப் பாதிக்கிறது. பைக்கை நிழலில் நிறுத்துவது நல்லது. இது மைலேஜை அதிகரிக்க உதவுகிறது.


மேலும் படிக்க | பிஎஸ்என்எல் இந்த பிளானிலும் இனி 84 நாட்கள் வேலிடிட்டி! 24 மணி நேரமும் பேசிகிட்டே இருக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ