விற்பனையில் சாதனை படைத்த சியோமி... ஆச்சரியத்தில் பயனர்கள்
சியோமி நிறுவனம் நடத்திய தீபாவளி வித் Mi சிறப்பு சலுகை விற்பனையில் 60 லட்சம் சியோமி சாதனங்கள் விற்பனையாகியுள்ளன.
ஸ்மார்ட் உலகத்தில் ஸ்மார்ட் ஃபோன், ஸ்மார்ட் டிவி, ஸ்மார் வாட்ச் என பல வசதிகள் வந்துவிட்டன. அப்படி ஸ்மார் எலக்ட்ரானிக் பொருள்களை கொடுப்பதில் சியோமி நிறுனம் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் சியோமி நடத்திய தீபாவளி வித் Mi சிறப்பு விற்பனையில் Mi வலைதளம், MI ஹோம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் என பல்வேறு தளங்களில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிக சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியோமி இந்தியா தெரிவித்து இருக்கிறது.
கடந்த மாதம் தொடங்கிய சிறப்பு விற்பனையின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கிடைக்கும் சாதனங்களுக்கு சியோமி சிறப்பு சலுகைகளை வழங்கியது. அந்த வகையில் தீபாவளி சிறப்பு விற்பனையின் முதல் பாகத்தில் அதிகம் விற்பனையான சாதனங்கள் பட்டியலில் ரெட்மி நோட் 11, ரெட்மி ஏ1, ரெட்மி 10, சியோமி 11i சீரிஸ், ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மற்றும் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ 32 இன்ச் உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை இருமடங்கு அதிகரித்து இருப்பதாக சியோமி தெரிவித்து உள்ளது.
அதிகம் விற்பனையான முதல் ஐந்து ஸ்மார்ட்போன்களில் சியோமி 11i சீரிஸ் மற்றும் சியோமி 11T ப்ரோ இடம்பெற்றுள்ளன. அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையான பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் சியோமி 12 ப்ரோ இடம்பிடித்துள்ளது. இதே போன்று ரெட்மி நோட் 11 மாடலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
ரெட்மி ஏ1 மாடல் ரூ. 8 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் அதிகம் விற்பனையான மாடல்களில் முதலிடம் பிடித்தது. ஸ்மார்ட்போன்களை அடுத்து சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ 32 இன்ச் மற்றும் சியோமி ஸ்மார்ட் டிவி 5X 43 இன்ச் மாடல்கள் பல்வேறு தளங்களில் மிகவும் பிரபலமான சியோமி டிவிக்களாக விளங்கின. சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி வங்கி சார்ந்த பலன்களையும் சியோமி தனது சிறப்பு விற்பனையில் வழங்கி இருந்தது. இதே விற்பனை தீபாவளி வரை நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ