11 மாதங்களுக்குப் பிறகு களத்தில் ISRO; இன்று PSLV-C49 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
இந்த ஆண்டின் முதல் ராக்கெட் ஏவுதல், இஸ்ரோ சார்பில் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் இன்னும் சிறிது நேரத்தில் பிஎஸ்எல்வி -சி 49 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.
PSLV-C49 Satellite Launch Today: போலார் சேட்டிலைட் ஏவுதல் வாகனம்-சி 49 (PSLV-C49/EOS-01) ஏவுதலுக்கான கவுண்டன் நவம்பர் 6 வெள்ளிக்கிழமை மதியம் 1:02 மணிக்கு தொடங்கியது என இஸ்ரோ (ISRO) தனது ட்வீட்டில் மூலம் அறிவித்தது. இது 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து இஸ்ரோவுக்கான முதல் விண்வெளி பயணமாக இது திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 17, 2020 அன்று, இஸ்ரோ வெற்றிகரமாக தொலைதொடர்பு செயற்கைக்கோள் ஜிஎஸ்ஏடி -30 ஐ ஏவியது. ஆனால் அது பிரெஞ்சு கயானாவில் உள்ள கூரூ ஏவுதளத்திலிருந்து (Kourou launch base) ஏவப்பட்ட அரியேன் ராக்கெட்டைப் பயன்படுத்தி செய்யப்பட்டது.
எனவே இந்த ஆண்டின் முதல் ராக்கெட் ஏவுதல், இஸ்ரோ சார்பில் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் இன்னும் சிறிது நேரத்தில் பிஎஸ்எல்வி -சி 49 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
ALSO READ | இந்தியாவின் ககன்யான் திட்டம் கொரோனா காரணமாக சிறிது தாமதமாகலாம்: சிவன்
2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து இஸ்ரோவுக்கான முதல் விண்வெளி பயணத்தை நேரலையில் காணுங்கள்!