ChatGPT: இடியாப்ப சிக்கலில் சீனா..! புதிய ஏஐ உருவாக்க திட்டம்
சாட்ஜிபிடியை சீனா பயன்படுத்த விரும்பினாலும், அந்நாட்டில் இருக்கும் சில கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் இருக்கும் முரண் ஆகியவை அவற்றுக்கு எதிராக இருக்கிறது.
சாட்ஜிபிடி இப்போது உலகளவில் டெக் உலகில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எந்தவொரு வேலையையும் நொடியில் முடித்துவிடும் ஆற்றல் இருப்பதால், உலகம் முழுவதும் பல கோடி பேரின் வேலை வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் டெக் உலகத்தையே சாட்ஜிபிடி மாற்றி அமைத்துவிடும் என யூகிக்கப்பட்டுள்ளது. கோடிங் முதல் செயலி உருவாக்கம் வரை, இமெயில் மார்க்கெட்டிங், வீடியோ எடிட்டிங், வாய்ஸ் ஓவர் என அனைத்து விதமான பணிகளையும் சாட்ஜிபிடி எனும் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் வழியாக செய்துவிடலாம்.
மேலும் படிக்க | AI ChatGPT-ஐ பார்த்து பதட்டப்படும் கூகுள்; வருமானம் காலி
இதனால் இந்த பணிகளில் இருக்கும் அனைவரும் வேலை இழப்பு அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். உலகம் முழுவதும் இருக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணிகளுக்கு சாட்ஜிபிடியை எப்படி பயன்படுத்தலாம்? என்ற வேலைகளை தொடங்கிவிட்டனர். குறிப்பாக பத்திரிக்கை துறையில் நேரடியாக சாட்ஜிபிடி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் வருகையால் புதிய நபர்களை பணிக்கு எடுப்பதையும், ஊதிய உயர்வு கொடுப்பதையும் இப்போதே நிறுவனங்கள் நிறுத்த தொடங்கியுள்ளன. விப்ரோ போன்ற டெக் நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு எடுத்தவர்களின் ஊதியத்தை பாதியாக குறைத்துள்ளது. இத்தகைய ஆற்றல் மிக்க தொழில்நுட்பமான சாட்ஜிபிடி சீனா பயன்படுத்த தயங்கி வருகிறது.
அந்நாட்டை பொறுத்தவரை கூகுள், டிவிட்டர் உள்ளிட்ட உலகம் முழுவதும் பயன்படுத்தும் இணையதங்கள், செயலிகள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. பிரத்யேகமான வலைதளம் ஆகியவையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாட்ஜிபிடி வருகை சீனாவிலும் புதிய கலக்கத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற தொழில்நுட்பத்தை அந்நாடு பயன்படுத்த விரும்பினாலும், அந்நாட்டில் இருக்கும் சட்டங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் அதனை அனுமதிக்க மறுக்கின்றன. இதனால் சாட்ஜிபிடி-ஐ போன்ற புதிய ஏஐ தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய PLATO-XL என்ற ஓபன் ஏஐ சாட்போட்டை சீனாவின் இணைய நிறுவனமான Baidu கொண்டு வந்தது. அது ஜாக் மா போன்ற மிகப்பெரிய தொழிலதிபரின் தகவல்களையே தவறாக கொடுத்தால், அது பெரிதாக எடுபடவில்லை.
பின்னர், Ernie என்ற மேம்படுத்தப்பட்ட ஓபன் ஏஐ-உருவாக்கத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது எந்தளவுக்கு சாத்தியம் என்பது சந்தேகமாக இருக்கிறது. சாட்ஜிபிடி போன்ற ஏஐ பாட் வெற்றிக்கு Nvidia தொழில்நுட்பங்கள் அவசியம். இதுமட்டுமல்லாமல் இன்னும் சில தரவுகள் மூலம் சாட்ஜிபிடி பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. இதுவே சாட்ஜபிடி வெற்றிக்கு காரணமாக உள்ளது. அத்தகைய பயிற்றுவிப்புகளை பெறுவது சீன நிறுவனத்துக்கு கடினமாக இருப்பதால், சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்க அந்நாடு இப்போதைக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ