சாட்ஜிபிடி இப்போது இணைய உலகில் கூகுளுக்கு இணையாக பயன்படுத்தப்படுகிறது. இணையத்தில் அடுத்த பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கும் சாட்ஜிடிபி ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை டெக் உலகம் மெச்சிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் மட்டுமல்லாது ஒருவரின் வேலையை எளிமையாகவும், விரைவாகவும் செய்வதற்கு இந்த சாட்ஜிபிடி உதவும். மனிதர்கள் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் அந்த வேலையை சாட்ஜிபிடியால் செய்ய முடியும். வீடியோ எடிட்டிங், வாய்ஸ் ஓவர், வீடியோ மேக்கிங், கோடிங், செயலி உருவாக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஏஐ சாட்ஜிபிடியால் கோலோச்ச முடியும்.
மேலும் படிக்க | இவ்ளோ காஸ்ட்லி ஃபோன் வெறும் ரூ.999க்கா? அலைமோதும் மக்கள்
இதனைக் கருத்தில் கொண்டே மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் வேகமாக தங்களுக்கு உகந்த ஏஐ தொழில்நுட்பத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே இது தொடர்பான பணிகளில் இருந்ததால் இப்போது பிங்க் பிரவுசரில் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்திருக்கின்றனர். சோதனை முறையில் அதனுடைய செயல்பாடுகளை மைக்ரோசாப்ட் கண்காணிக்க தொடங்கியிருக்கிறது. இதில் கிடைக்கும் நிறை குறைகளைக் கொண்டு மேலும் தங்களின் ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்த இருக்கிறது மைக்ரோசாப்ட்.
அதேநேரத்தில் சாட்ஜிபிடியின் எல்லை எதுவரை என்பதை தீர்மானிக்க முடியவில்லை என ஒருபுறம் டெக் உலகினரிடையே அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. இது தொழில்நுட்ப உலகில் எத்தகைய மாற்றங்களையெல்லாம் கொண்டு வரும் என்பதை யூகிக்க முடியவில்லை என தெரிவித்துள்ள அவர்கள், கோடிக் கணக்கானோரின் வேலைக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதை மட்டும் ஒற்றைவரியில் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சாட்ஜிபிடியைக் கொண்டு உளவு பார்க்கலாம் என்ற தகவல் தொழில்நுட்ப உலகினர் முதல் சாமானியர் வரை அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.
சாட்ஜிபிடி ஏஐ தொழில்நுட்பம் உளவுக்கு பயன்படுத்தப்பட்டால் தேச பாதுகாப்பு என்பதன் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த அச்சமூட்டும் கேள்விகள் எழுந்து கொண்டிருக்கும்போதே, உளவு பார்க்கும் சாட்ஜிபிடிகள் புழக்கத்துக்கு வந்துவிட்டதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளது. அதனை எப்படி பயன்படுத்தப்படும்? எப்படி உளவு பார்க்கப்படும்? என்ற மிகப்பெரிய கேள்விகளுக்கு டெக் நிபுணர்களிடம் கூட இப்போதைக்கு பதில் இல்லை.
மேலும் படிக்க | அமேசான் ChatGPT: கூகுள் - மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக புது யுக்தி...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ