AI ChatGPT-ஐ பார்த்து பதட்டப்படும் கூகுள்; வருமானம் காலி

சாட்ஜிபிடி வருகைக்குப் பின்னர் கூகுள் நிறுவனத்திடம் பதட்டம் தெரிகிறது. ஏனென்றால், கூகுளின் வருவாய்க்கு சாட்ஜிபிடி பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 18, 2023, 09:03 PM IST
AI ChatGPT-ஐ பார்த்து பதட்டப்படும் கூகுள்; வருமானம் காலி  title=

சாட்ஜிபிடி வந்தவுடன் கூகுள் அவசர அவசரமாக தங்களுடைய ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. முதல் கட்டமாக வெளியான Google Chatbot முடிவுகள் திருப்திகரமாக இல்லை. கூகுள் ஏஐ செய்த ஒரே ஒரு தவறு காரணமாக மிகப்பெரிய நஷ்டத்தை அந்த நிறுவனம் சந்தித்திருக்கிறது.    

மேலும் படிக்க | ChatGPT vs Bard: கூகுளின் சொந்த செயற்கை நுண்ணறிவு நுட்பம் விரைவில் அனைவருக்கும் சாத்தியம்

கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளம். 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இது சிறந்த தேடுபொறியாக உள்ளது. இருப்பினும், ஆன்லைனில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ChatGPT போன்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்களின் வருகைக்குப் பிறகு, கூகிள் வருவாய் பெருமளவு இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதட்டப்படுள்ள கூகிள், தனது சொந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்கி ChatGPT-ஐ எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. 

இதில் கூகுளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை என்னவென்றால், அது உருவாக்கிய சாட்போட் சிறந்த தொடக்கத்தை உருவாக்கவில்லை. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குறித்து கூகுளின் செயற்கை நுண்ணறிவு தவறான தகவலை கொடுத்திருக்கிறது.இதன்பிறகு, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் பங்குகள் சரிந்தன. விளம்பர வருவாயை மட்டுமே மிகப்பெரிய மூலதனமாக கூகுள் சார்ந்திருக்கிறது. இந்த ஒரு தவறான தகவலால் அந்த மூல வருவாய்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி சரிசெய்வது என கூகுள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.  

மேலும் படிக்க |  ChatGPT Spy: உளவு பார்க்க பயன்படுத்தப்படும் சாட்ஜிபிடி..! என்னவாகும் தனிநபர் பாதுகாப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News