வாடிக்கையாளர்களே! ஏர்டெல் நிறுவனம் அதன் யூசர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்துள்ளது! இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஓடிடி தளங்களின் தேவை அதிகரித்திருக்கும் நிலையில், ஏர்டெல் தற்போது இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகிய பிரபல ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாவை உள்ளடக்கியுள்ளன. இந்த திட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கு காணலாம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல் நம்பர் 2, ரீசார்ஜ் ஆஃபர்கள்!


ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தற்போது 37 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய, லாபகரமான திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் ஏர்டெல், தற்போது ஓடிடி தளங்களுடன் இணைந்த இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் உங்களுக்கு ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாவை மட்டுமல்ல, கூடுதல் அம்சங்களையும் வழங்குகின்றன.


மேலும் படிக்க  | அயோத்தி கோவிலுக்கு நன்கொடை கொடுக்கணுமா? எளிய வழி இதோ!


839 ரூபாய் திட்டம்:


இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள். 168 ஜிபி டேட்டா (2 ஜிபி/நாள்), 100 இலவச எஸ்எம்எஸ்/நாள், 3 மாத இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா, டேட்டா, அழைப்புகள், ஓடிடி என அனைத்தும் ஒரே ரீசார்ஜில் பெற்றுக் கொள்ள முடியும். 


1,499 ரூபாய் திட்டம்:



இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள். 252 ஜிபி டேட்டா, அதாவது நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா, தகுதி வாய்ந்த பயனர்களுக்கு இலவச 5ஜி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ்/நாள், இலவச நெட்ஃபிளிக்ஸ் அடிப்படை மொபைல் சந்தா ஆகியவை கிடைக்கும்.


வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் விருந்து!


ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டங்கள் குறிப்பாக டிஜிட்டல் பொழுதுபோக்கு அன்பர்களைக் கவரும்! 839 ரூபாய் திட்டத்தில் ஹாட்ஸ்டாரையும், 1,499 ரூபாய் திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸையும் முற்றிலும் இலவசமாக ரசிக்கலாம். குறைந்த செலவில் அதிக லாபம் தரும் இந்த திட்டங்கள் மூலம் உங்களுக்கு பிடித்த படங்கள், தொடர்கள், நிகழ்ச்சிகள் என அனைத்தையும் அனுபவிக்கலாம்.


மேலும் படிக்க | போனா வராது... அதிரடி விலையில் ஐபோன் 15 ப்ரோ... அதுவும் ஐபோன் 14 ப்ரோவை விட கம்மி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ