அயோத்தி கோவிலுக்கு நன்கொடை கொடுக்கணுமா? எளிய வழி இதோ!

Donation For Ayodhya Ramar Temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு எளிமையாகவும், விரைவாகவும் நன்கொடை அளிக்கும் வசதியை Paytm நிறுவனம் அதன் செயலி மூலம் கொண்டு வந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 24, 2024, 02:36 PM IST
  • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
  • குழந்தை ராமர் சிலை நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு நீங்கள் நேரடியாக நன்கொடை அளிக்கலாம்.
அயோத்தி கோவிலுக்கு நன்கொடை கொடுக்கணுமா? எளிய வழி இதோ! title=

Easy Method To Give Donation For Ayodhya Ramar Temple: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பலரிடம் பெறப்பட்ட நன்கொடையின் மூலமாக ராமர் கோவிலை கட்டி எழுப்பியது. தரைத்தளம் நிறைவடைந்த நிலையில் அங்கு குழந்தை ராமர் சிலை பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

எளிமையாக நன்கொடை அளிக்கலாம்

அந்த வகையில், அயோத்தி ராமர் கோவிலின், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க Paytm செயலி வழிவகை செய்துள்ளது. குறிப்பாக, ராம பக்தர்கள் தங்கள் மொபைல் ஃபோனில் இருந்து நேரடியாக Paytm செயலி மூலம் நன்கொடை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரான் பிரதிஷ்டை நடைபெற்ற அன்று Paytm செயலியில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் வசதி வந்துவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பயனர்கள் டிஜிட்டல் நன்கொடைகளை எளிதாக வழங்கலாம். இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் Paytm செயலியில் உள்ள 'Devotion' பிரிவில் இருந்து பங்களிக்கலாம். 

மேலும் படிக்க | 250 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் வடிக்கப்பட்ட அயோத்தி ராமர் சிலை!

Paytm செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவில் QR குறியீடு மற்றும் மொபைல் பணம் செலுத்துவதில் Paytm மிகப்பெரிய பெயரை அடைந்துள்ளது. எனவே, ராமர் கோவிலுக்கு எளிதாகவும், விரைவாகும் டிஜிட்டல் பங்களிப்புகளைச் செய்வதில் நாங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளோம். எங்கள் புதுமையான மொபைல் கட்டண தீர்வுகளை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்வதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்' என தெரிவித்துள்ளார்.

நன்கொடை அளிப்பது எப்படி?

- Paytm செயலியை திறந்து, பில் பேமென்ட்களின் கீழ் "Show All" என்பதைக் கிளிக் செய்யவும்.
- பிற சேவைகள் பிரிவில் இருந்து "Devotion" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- வழிபாட்டு தலங்கள் பிரிவில், "Shri Ram Janmabhoomi Teerth Kshetra" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட்டு "Proceed" என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பும் தொகையை உள்ளிட்டு "Next" என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களுக்கு விருப்பமான கட்டண முறையைப் பயன்படுத்தி "Proceed To Next Payment" என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு எளிமையாக நன்கொடை அளிக்கலாம்.

Paytm வாடிக்கையாளர்கள்

2024ஆம் ஆண்டு ஜனவரியுடன் 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு நிறைவடைந்தது. இந்த காலாம்டு வரை 10 கோடிக்கும் அதிகமான செயலில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தாண்டியுள்ளதாக Paytm சமீபத்தில் தெரிவித்துள்ளது. Paytm நிறுவனர் மற்றும் CEO விஜய் சேகர் சர்மா இது ஒரு "முக்கியமான சாதனை" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | Ramar Idol Ornaments: ராமர் சிலை நகைககளில் 18,000 மரகதங்கள், வைரங்கள்... தங்கம் எத்தனை கிலோ தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News