இனிமேல் இந்த ரீசார்ஜ் பேக் இருக்காது! அதிரடியாக நீக்கிய ஏர்டெல்!
Airtel Recharge: கொல்கத்தா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளில் ஏர்டெல் இன்னும் ரூ.99 விலைகொண்ட ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ரூ.99 விலையில் வழங்கி வந்த ரீசார்ஜ் திட்டங்களை கிட்டத்தட்ட 17 பகுதிகளில் இருந்து நீக்கியுள்ளது. ரூ.99 விலை கொண்ட ரீசார்ஜ் திட்டத்திற்கு பதிலாக மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற சில பகுதிகளில் வசிக்கும் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.155 விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஏர்டெல் ரூ.99 ரீசார்ஜ் திட்டத்தை 22 இடங்களில் வழங்கி வந்த நிலையில் தற்போது 19 இடங்களில் இந்த திட்டத்தை நீக்கியுள்ளது. உங்கள் சிம் கார்டை செயலில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் ரூ.155 செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதேசமயம் கொல்கத்தா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளில் ஏர்டெல் இன்னும் ரூ.99 விலைகொண்ட ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது.
மேலும் படிக்க | மலிவான விலையில் ஐபோன் 11! ரூ. 20000 வரை அதிரடி தள்ளுபடி
ஏர்டெல் வழங்கும் இந்த ரூ.155 விலைக்கொண்ட ரீசார்ஜ் திட்டமானது 24 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்புகள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேசமயம் ஏர்டெல் வழங்கும் ரூ.99 விலைக்கொண்ட ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 200எம்பி டேட்டா மற்றும் அழைப்புகளை நிமிடத்திற்கு ரூ.2.5 பைசாவில் வழங்குகிறது. இதுதவிர ரூ.155 திட்டமானது இலவச விங்க் மியூசிக் மற்றும் ஹெலோடியூன்ஸ் நன்மைகளையும் வழங்குகிறது. கடந்த நவம்பரில் ஏர்டெல் ஹரியானா மற்றும் ஒடிசாவில் தனது சோதனையை தொடங்கியது.
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் ஏர்டெல்லின் வருவாய் 1.3 -1.5 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்க பெரியளவில் முதலீடு செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏர்டெல் ஹரியானா மற்றும் ஒடிசா போன்ற இடங்களில் 0.1 மில்லியன் மற்றும் 0.2 மில்லியன் செயலில் உள்ள பயனர்களைச் சேர்த்தது, இதன்மூலம் ஏர்டெல்லின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவது தெரிகிறது. தற்போது, ஏர்டெல் 365 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது, அதேசமயம் ஜியோ நாட்டில் 391 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | Jio Prepaid Recharge: ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம், அலறிய ஏர்டெல், Vi
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ