மொபைலில் இன்டர்நெட் மெதுவாக இருக்கிறதா? அதிகப்படுத்த சில வழிகள்!

இணைய வேகம் குறைவாக இருக்கும்போது ஸ்மார்ட்போனை ரீ-ஸ்டார்ட் செய்வது அல்லது ஏர்பிளேன் மோடை ஆன் செய்வது போன்றவற்றை பலரும் செய்து வருகின்றனர்.    

Written by - RK Spark | Last Updated : Feb 20, 2023, 01:36 PM IST
  • டிஎன்எஸ் சேஞ்சர் உங்கள் மொபைலின் இணைய வேகத்தை அதிகரிக்கும்.
  • இடம், நேரம் அல்லது நெட்வொர்க் காரணமாக இணைய வேகம் பாதிக்கப்படலாம்.
  • ஒரே நேரத்தில் அதிக ஆப்ஸ்களை பயன்படுத்துவது இணைய வேகத்தை குறைக்கும்.
மொபைலில் இன்டர்நெட் மெதுவாக இருக்கிறதா? அதிகப்படுத்த சில வழிகள்! title=

உணவு, உடை போன்றவை எப்படி நமது வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறதோ அதேபோல இணையமும் நமது வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது.  இணைய வேகம் மெதுவாக இருந்தால் அது நமக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடும், இணைய வேகம் வேகமாக இருந்தால் தான் நம்மால் நமக்கு பிடித்த விஷயங்களை மொபைலில் அல்லது கணினியில் பார்த்து மகிழ முடியும்.  சில நேரங்களில், மெதுவான இணையம் யூபிஐ டிரான்ஸாக்ஷன்களை மேற்கொள்வது அல்லது அவசர மின்னஞ்சல் அல்லது செய்திகளை அனுப்புவது போன்ற முக்கியமான செயல்களில் பாதிப்பு ஏற்படுத்திவிடுகிறது.  இருப்பிடம், நேரம் மற்றும் நெட்வொர்க் நெரிசல் போன்ற பல காரணிகள் உங்கள் இணைய வேகத்தை பாதிக்கிறது.  

இணைய வேகம் குறைவாக இருக்கும்போது ஸ்மார்ட்போனை ரீ-ஸ்டார்ட் செய்வது அல்லது ஏர்பிளேன் மோடை ஆன் செய்வது போன்றவற்றை பலரும் செய்து வருகின்றனர்.  இப்படி செய்துவிட்டால் மட்டும் இணைய வேகம் அதிகரித்துவிடும் என்பதில்லை, இன்னும் சில வழிகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இணைய வேகத்தை அதிகரிக்கலாம்.  உங்கள் மொபைல் இணைய வேகத்தை சரிபார்க்க உங்களை அனுமதிக்கும் பல செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் உள்ளன.  Ookla Speedtest வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் இதனை எளிதாக்குகிறது.

மேலும் படிக்க | 365 நாட்கள் வேலிடிட்டி..ஏர்டெல்லின் அசர வைக்கும் ரீசார்ஜ் திட்டம்

Ookla Speedtest ஐ பயன்படுத்தி இணைய வேகத்தைச் அதிகரித்தல்:

- Speedtest.net என்பதற்கு செல்லவும் அல்லது மொபைலில் உள்ள ஆப் ஸ்டோரிலிருந்து Ookla Speedtest செயலியை டவுன்லோடு செய்யவும்.

- ஸ்பீட் டெஸ்ட் செய்ய செயலியை திறந்து, "GO" என்கிற பட்டனை டேப் செய்யவும்.

- செயலி டவுன்லோடு மற்றும் அப்லோட் ஸ்பீட் போன்றவற்றை சோதிப்பதன் மூலம் இணைய வேகம் அறவிடப்படும்.

- சோதனை முடிந்ததும் உங்கள் டவுன்லோடு மற்றும் அப்லோட் ஸ்பீட் மற்றும் உங்கள் பிங் உள்ளிட்ட முடிவுகளை ஆப்ஸ் காண்பிக்கும்.

DNS சேவையை பயன்படுத்தி இணைய வேகத்தை அதிகரித்தல்:

ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் பிளே ஸ்டோரில் பல டிஎன்எஸ் சேஞ்சர் ஆப்ஸ்கள் உள்ளது.  டிஎன்எஸ் சேஞ்சர், 1.1.1.1: ஃபாஸ்ட் அண்ட் சேஃபர் இன்டர்நெட் மற்றும் கூகுள் டிஎன்எஸ் சேஞ்சர் உள்ளிட்ட செயலிகள் உங்களுக்கு கிடைக்கிறது.  பின்வரும் படிநிலைகளை பின்பற்றி நீங்கள் இணைய வேகத்தை அதிகரிக்கலாம்.

- உங்கள் மொபைலில் செயலியை டவுன்லோடு செய்து அதை திறக்க வேண்டும்.

- இப்போது உங்கள் நெட்வொர்க் அமைப்புகளை அணுக பயன்பாட்டிற்கு தேவையான அனுமதிகளை வழங்கவும்.

- நீங்கள் பயன்படுத்த விரும்பும் டிஎன்எஸ் சேவையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

- டிஎன்எஸ் சேவையகத்தை நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது டிஎன்எஸ் சேவையகத்தின் IP முகவரியை உள்ளிடலாம்.

- நீங்கள் வெவ்வேறு டிஎன்எஸ் சேவையகத்தின் வேகத்தைத் தேர்ந்தெடுத்து சரிபார்த்து, வேகமான சேவையகத்தைத் தேர்வுசெய்யலாம்.

- மாற்றங்களைப் பயன்படுத்த "ஸ்டார்ட்" என்கிற பட்டனை க்ளிக் செய்து டிஎன்எஸ் சேவையை பயன்படுத்த வேண்டும்.

- புதிய டிஎன்எஸ் சேவையகம் உங்கள் மொபைல் இணைய வேகத்தை மேம்படுத்தியுள்ளதா என்பதைச் சரிபார்க்க, இப்போது ஸ்பீட் டெஸ்டை இயக்கலாம்.

இணைய வேகத்தை அதிகரிக்க உதவும் வேறு சில வழிகள்:

- உங்கள் மொபைலிலுள்ள கேச் மற்றும் குக்கீகளை அழிப்பது உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க உதவும்.

- டேட்டா சேவிங் மோடை ஆன் செய்யவேண்டும்.

- ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்குவது உங்கள் இணைய வேகத்தைக் குறைக்கும் என்பதால் ரேமை  காலி செய்து, பயன்படுத்தாத செயலிகளை மூட வேண்டும்.

- ஆட்டோமேட்டிக் அப்டேட்டுகள் நிறைய டேட்டாவை எடுக்கும், இதனால் இணைய வேகம் குறையும்.  எனவே ஆட்டோமேட்டிக் அப்டேட்டுகளை நீங்கள் ஆஃப் செய்யவேண்டும்.

மேலும் படிக்க | Flipkart சலுகை! வெறும் ரூ.1149-க்கு அட்டகாசமான Realme 9i வாங்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News