உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற நம்பகமான லேப்டாப்பைக் கண்டறிவது கஷ்டமாக இருக்கலாம், குறிப்பாக 15,000 ரூபாய்க்குள் மடிக்கணினி வாங்க விரும்புபவர்கள், நல்ல செயல்திறனை வழங்கும் ஆனால் பட்ஜெட்டுக்கு அடங்கும் லேப்டாப்களை  வாங்க விரும்புவார்கள். இதற்கு அமேசான் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

15,000 ரூபாய்க்கு கீழ் உள்ள சில சிறந்த மடிக்கணினிகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். நீங்கள் செலவழிக்கும் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்கும் இந்த லேப்டாப்கள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்.  


பிரைம்புக் 4ஜி, 2024  (Primebook 4G, 2024) 
பிரைம்புக் 4ஜி (2024) என்பது 11.6-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் வெறும் 1.065 கிலோ எடை கொண்ட ஒரு நேர்த்தியான மற்றும் இலகுரக லேப்டாப் ஆகும்.  பல்துறைத்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மடிக்கணினி MediaTek MT8788 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் PrimeOS இல் இயங்குகிறது, இது வேலை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டிற்கும் ஏற்றது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஈஎம்எம்சி சேமிப்பகத்துடன் வரும் இந்த லேப்டாப்பில், செயலிகள் மற்றும் கோப்புகளுக்கு போதுமான இடம் உள்ளது.


மேலும் படிக்க | மழைக்காலத்தில் ஸ்மார்ட்போனை பாதுகாக்க செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்...


வாக்கர் தின் & லைட் லேப்டாப் (Walker Thin & Light Laptop)
வாக்கர் தின் & லைட் லேப்டாப் 14.1-இன்ச் FHD ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 1920 x 1080 தெளிவுத்திறன் கொண்டது, இந்த லேப்டாப்பில் காட்சிகள் மிகவும் தெளிவுடன் இருக்கும். இது, ஜெமினி லேக் N4020 செயலி மூலம் இயக்கப்படுகிறது, UHD கிராபிக்ஸ் 600 பொருத்தப்பட்டுள்ளது. இந்த யூஎச்டி  கணினிக்கு தேவைப்படும் செயல்திறனை தங்குதடையில்லாமல் வழங்குகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பகம் கொண்டது, பயனர்ககளுக்கு தேவையான கோப்புகளுக்கு போதுமான இடம் உள்ளது. அத்துடன் அப்லோடிங் திறனும் அதிகமாக உள்ளது.


ஃபுடோபியா அல்டிமஸ் புரோ (FUTOPIA ULTIMUS PRO (2024))
1.30 கிலோ எடை கொண்ட செயல்திறன் மற்றும் பெயர்வுத்திறனை ஒருங்கிணைக்கும் ஒரு இலகுரக லேப்டாப் ஃபுடோபியா அல்டிமஸ் புரோ ஆகும். 2.8 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட இன்டெல் செலரான் டூயல் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 4ஜிபி ரேம் உடன் பல்வேறு பணிகளையும் மென்மையாக செய்கிறது. 14.1-இன்ச் HD டிஸ்ப்ளே மற்றும் இன்டெல் HD கிராபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது தெளிவான காட்சிகளை வழங்குகிறது.


எச்.பி குரோம்புக்
HP Chromebook (2024) சிறிய லேப்டாப், இலகுரக சாதனம், வெறும் 1.34 கிலோ எடை கொண்டது, இது பயணத்தின்போது எடுத்து செல்லவும் இயக்கவும் வசதியானது.  MediaTek MT8183 செயலி மூலம் இயக்கப்படும் 11.6-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ள இது அன்றாட பணிகளுக்கான செயல்திறனை உறுதி செய்கிறது.


மேலும் படிக்க| 30000 ரூபாய்க்குள் சூப்பர் லேப்டாப்! அமேசான் சேல் வந்தாச்சு! மடிக்கணினிக்கான தள்ளுபடி விற்பனை