ஐபோன் நிறுவனத்துக்கு இவ்வளவு அபராதமா?... அதிரடி காட்டிய பிரேசில்
ஆப்பிள் நிறுவனத்துக்கு பிரேசில் நாடு பெரும் தொகை அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் ஆப்பிள் நிறுவனத்தி ஐபோன் பெரும் வரவேற்பை பெற்றிருப்பவை. அந்த ஃபோனை வைத்திருந்தால் ஒரு கெத்து என்று நினைப்பவர்களும் பலர் உண்டு. அதேசமயம், அதை எளிதாக கையாள முடியவில்லை என்றும் சிலர் கூறுவதுண்டும். இருப்பினும் பலருக்கு விருப்பமாக இருப்பது ஐபோன். ஆனால் அந்த நிறுவனத்திற்கு பிரேசில் நாடு அபராதம் விதித்துள்ளது. அதாவது, ஐபோன்களுடன் சார்ஜர் வழங்காமல் விற்பனை செய்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரேசில் நாட்டு நித்ததுறை சார்பில் 2.34 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்த நிலையில், சார்ஜர்கள் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு மற்றொரு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து வெளியாகியிக்கும் தகவல்களின்படி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு ச்இந்திய மதிப்பில் 1,56,59,47,700 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களுடன் கட்டாயம் சார்ஜர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க | சேல்ஸில் ஜெட் வேகம்; சீன போன்களுக்கு ஆப்பு வைத்த பிரபல ஸ்மார்ட்போன்
பிரேசில் நாட்டில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சார்ஜர் வழங்கப்பட வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு நீதிபதி கரமுரு அபோன்சோ பிரான்சிஸ்கோ உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு இறுதியானது இல்லை என்பதால், இதில் மேல்முறையீடு செய்ய முடியும். எனவே ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீட்டுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு வாக்கில் ஐபோன் 12 வெளியீட்டில் இருந்து ஐபோன்களுடன் சார்ஜர் வழங்குவதை ஆப்பிள் நிறுத்திவிட்டது. ஆப்பிளின் நடவடிக்கையை தொடர்ந்து சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனங்களும் இதே போன்று பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் சார்ஜர் வழங்குவதை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ