பண்டிகை காலம் என்பதால் ஈ-காமர்ஸ் தளங்கள் கவர்ச்சியான சலுகைகளை வழங்குகின்றன. பண்டிகை கால விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வாரி இறைத்து வருகின்றனர். இதனால், ஆஃபர் அதிகம் உள்ள நிறுவனங்களின் மொபைல் விற்பனை அமோகமாக இருக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஜெட் வேகத்தில் இருக்கிறது என்றே சொல்லலாம்.
அண்மையில் பண்டிகை காலத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியல் குறித்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் சாம்சங்க் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை மிகவும் விரும்பி வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் பண்டிகை கால விற்பனையின் போது வாங்கப்பட்ட அதிக ஸ்மார்ட்போன்கள் இதுவாகும்.
நம் நாட்டில் பண்டிகை கால விற்பனையின் போது சாம்சங் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் உள்ளது. இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை விற்பனையில் அதிக பங்கையும் சாம்சங்க் நிறுவனமே கொண்டுள்ளது. சாம்சங்க் நிறுவனத்தின் பின்னால் Xiaomi மற்றும் Realme நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இருக்கிறது.
பண்டிகை கால விற்பனையில் சாம்சங்கின் சந்தைப் பங்கு 26 சதவீதமாக இருந்துள்ளது. இந்த நேரத்தில்,33 லட்சம் ஸ்மார்ட்போன் யூனிட்களை சாம்சங்க் விற்பனை செய்துள்ளது. செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 30 வரையிலான விற்பனை காலத்தில், சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ, கேலக்ஸி எஸ் 22 பிளஸ், கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி இசட் பிளிப் 3 ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரியளவில் விற்பனையாகியுள்ளது.
பிற பிரபலமான ஸ்மார்ட்போன்கள்
பிற சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் - Xiaomi மற்றும் Realme - பண்டிகை விற்பனையில் முதல் 3 தரவரிசையில் இடம் பிடித்துள்ளன. விற்பனையின் போது இந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் பங்கு முறையே 20 சதவீதம் மற்றும் 17 சதவீதமாக இருந்தது. சியோமியின் 25 லட்சம் யூனிட்களும், ரியல்மியின் சுமார் 22 லட்சம் யூனிட்களும் வாங்கப்பட்டன.
மேலும் படிக்க | BSNL புதிய அதிரடி ப்ரீபெய்ட் திட்டங்கள்: கலக்கத்தில் Jio, Airtel, Vi
விற்பனையின் போது பெரிய தள்ளுபடிகள் இருந்தபோதிலும், ஆப்பிள் போனை மக்கள் அதிகம் வாங்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இது தவிர, பண்டிகை விற்பனையில் பிற நிறுவன ஸ்மார்ட்போன்களின் பங்கு 38 சதவீதமாக இருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு சதவீதம் குறைவான ஸ்மார்ட்போன் யூனிட்கள் விற்பனையாகியுள்ளதும் தெரியவந்திருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ