இன்று, ஆகஸ்ட் 28 அன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 46வது RIL AGM 2023 நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த மிகப்பெரிய நிகழ்வில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இந்திய சந்தைக்கான ஜியோ 5ஜியின் எதிர்காலம் மற்றும் கட்டணத் திட்டங்களைப் பற்றி கூறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனுடன், ஜியோ ஏர் ஃபைபர் ( JioAir Fibre) ரோட்மேப், புதிய 5ஜி ஜியோ ஸ்மார்ட்போன் மற்றும் இன்னும் பல விஷயங்களை பற்றிய அறிவிப்பு வரக்கூடும். ஆனால், மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று Jio 5G பற்றிய அப்டேட் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிலயன்ஸ் நிறுவனத்தின் RIL AGM 2023 நிகழ்வின் போது, ​​முகேஷ் அம்பானி புதிய Jio 5G ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவிக்கலாம் என்ற செய்தி பரவிய வண்ணம் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே பெரும்பாலான இந்திய பகுதிகளில் 5ஜி நெட்வொர்க்கை வழங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஜியோ 5ஜி சேவையை வழங்க நிறுவனம் விரும்புகிறது. இதுவரை, 7,500 க்கும் மேற்பட்ட பிராந்தியங்கள், மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் 5G கவரேஜ் உள்ளது. இது வரை, ஜியோ 5G சேவைகளை வழங்க தனது தற்போதைய 4G திட்டங்களை பயன்படுத்தியுள்ளது.


இந்த நிகழ்வில் நிறுவனம் 5G கட்டண திட்டங்களை (5G Tariff Plans) அறிவிக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த திட்டங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. ஆகையால், இதை உறுதியாக கூற முடியாது. நிகழ்வு தொடங்கி, அறிவிப்பு வந்த பின்னர்தான் இது தெளிவாகும். 


மேலும் படிக்க | BSNL-ன் இந்த 'சூப்பர்' திட்டம் ஜியோ-ஏர்டெலை மிரள வைத்தது..


இந்தியாவில் 5G கட்டண ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும்?


5ஜி கட்டணத் திட்டங்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்று அரசாங்கம் முன்பு கூறியது. பிரதமர் மோடியும் டேட்டா செலவைக் குறைக்கும் குறிப்பை அளித்திருந்தார். ஒரு ஜிபிக்கு ரூ. 300 -இல் இருந்து ஒரு ஜிபிக்கு ரூ.10 என்று சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவில் சராசரியாக ஒரு நபர் மாதத்திற்கு 14 ஜிபி பயன்படுத்துகிறார் என்று கூறினார். இதன் விலை மாதத்திற்கு சுமார் ரூ 4200 ஆக இருக்கும், ஆனால் அதன் விலை ரூ 125-150 ஆக உள்ளது. அரசின் முயற்சியின் பலனாக இது சாத்தியமானது என கூறப்பட்டது. 


கடந்த ஆண்டு, ஜியோ 5ஜி கட்டணத் திட்டங்கள் உலகில் உள்ள எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தையும் விட மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் என்று அம்பானி அறிவித்திருந்தார். இது தவிர, 5ஜி திட்டத்திற்கான கட்டணங்கள் 4ஜி திட்டத்திற்கு சமமாக இருக்கும் என்று ஏர்டெல் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது. தற்போது தனிநபர்கள் வரம்பற்ற பலன்களுக்காக ரூ.400 முதல் ரூ.600 வரை செலவிடுகின்றனர். எனவே, 5ஜி திட்டங்களின் விலை இந்த வரம்பிற்குள் குறையும் வாய்ப்பு உள்ளது. எந்த நிறுவனம் சிறந்த கட்டணத் திட்டத்தை வழங்க முன்வருகிறது என்பதை இப்போது பார்க்க வேண்டும். ரிலையன்சின் இந்த நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வந்த பிறகு இது குறித்த தெளிவு நமக்கு கிடைக்கக்கூடும். 


சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் இரண்டாவது தலைமுறை ஜியோபுக்கை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் முந்தைய பதிப்பை விட சிறந்த செயலியுடன் சமீபத்திய Jiobook 2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த லேப்டாப்பை ஆன்லைன் ஷாப்பிங் தளமான Amazon இலிருந்து வாங்கலாம். ஜியோவின் இந்த பட்ஜெட் ஃப்ரெண்ட்லி லேப்டாப்பில் 4ஜி இயக்கப்பட்டது. முன்னதாக, நிறுவனம் இந்தியாவில் மலிவான 4ஜி அம்ச தொலைபேசியான JioBharat V2 ஐ அறிமுகப்படுத்தியது.


மேலும் படிக்க | டார்க் வெப்பில் உங்கள் தகவல்கள் இருக்கிறதா? நொடியில் ஸ்கேன் செய்து கொடுக்கும் கூகுள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ