Flipkart Big Diwali Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் பிக் தீபாவளி சேல் தொடங்கியது. இந்த விற்பனை அக்டோபர் 23 வரை நடைபெறும். அதாவது தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு வரை இந்த விற்பனை இருக்கும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. தீபாவளியன்று நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பி, உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த விற்பனை உங்களுக்குப் பயன்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Blaupunkt இன் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 42 இன்ச் ஸ்மார்ட் டிவியை இன்று பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.2,499-க்கு வாங்கலாம். இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி-ஐ இவ்வளவு குறைந்த விலையில் எப்படி வாங்குவது என இங்கே காணலாம். 


Flipkart Big Diwali Sale: Blaupunkt Cybersound 42 இன்ச் ஸ்மார்ட் டிவி: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


Blaupunkt Cybersound 42 இன்ச் ஸ்மார்ட் டிவியின் தொடக்க விலை ரூ.29,999 ஆகும். எனினும், பிளிப்கார்டில் இந்த விற்பனையில் இது ரூ.14,999க்கு கிடைக்கிறது. டிவியில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகும், பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இவற்றின் காரணமாக டிவியின் விலை கணிசமாகக் குறையும்.


மேலும் படிக்க | 5ஜி மொபைல் வாங்குவதற்கு முன்பு கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள் 


Flipkart Big Diwali Sale: Blaupunkt Cybersound 42 inch Smart TV: வங்கி சலுகை


Blaupunkt Cybersound 42 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு டிவியின் விலை ரூ.13,449 ஆக குறையும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அதாவது பரிமாற்ற சலுகையும் உள்ளது. இது விலையை கணிசமாகக் குறைக்கும்.


Flipkart Big Diwali Sale: Blaupunkt Cybersound 42 இன்ச் ஸ்மார்ட் டிவி: எக்ஸ்சேஞ்ச் சலுகை


Blaupunkt Cybersound 42 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ரூ.11 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும், இதற்கு டிவியின் கண்டிஷன் நன்றாகவும், டிவி லேட்டஸ்ட் மாடலாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் 11 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். இந்த அனைத்து தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடிந்தால், இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.2,499 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | கிடுகிடுவென உயரப்போகுது விலை... ஸ்மார்ட்போனை சீக்கிரம் வாங்குங்க... 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ