ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தற்போது, இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பெரும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் மூலம் இந்த தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, மொபைல்கள், ஸ்மார் வாட்ச்கள் போன்ற சாதனங்களை வாங்க இதுவே சிறந்த நேரம் என்பதால், அதன் விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய பண்டிகை காலங்கள் நிறைவடைந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில், இந்தியாவில் பண்டிகை காலங்கள் நிறைவுபெற்றவுடன் ஸ்மார்ட் போன்களின் விலைகளை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீபாவளிக்குப் பிறகு தங்களின் பொருள்களின், குறிப்பாக குறைந்த விலையில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களின், விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை விலை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தீபாவளி ஷாப்பிங் செய்யணுமா? இந்த தளங்களில் அதிரடி தள்ளுபடிகள் உள்ளன
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி, நிறுவனங்களின் உதிரிபாகங்களின் விலையை அதிகரித்துள்ளது. இதுவே, விலையேற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்திய தயாரிப்பு நிறுவனங்களும் ரூபாயின் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது வரை, இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள், தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாய்க்கு ஏற்ற வகையில் விலையை மாற்றாமல், ஒரே சீராகதான் வைத்திருந்தனர். இருப்பினும், இந்த பண்டிகை காலத்திற்கு பிறகு விலையில் மாற்றத்தை கொண்டுவர கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளன.
மேலும், இந்த விலையேற்றம் பட்ஜெட் போன்களில் (15 ஆயிரம் - 20 ஆயிரம்) தான் செயல்படுத்தப்படும் என்றும், மிட்-பட்ஜெட் மற்றும் பிரீமியம் வகை செல்ஃபோன்களின் விலையை ஏற்ற வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. சமீபத்தில், ஆப்பிள் அதன் பட்ஜெட் ஐபோன் SE 2022 வகையின் விலையை ரூ.6 ஆயிரம் வரை உயர்த்தியிருந்தது. Xiaomi மற்றும் Lava போன்ற நிறுவனங்களின் சாதனங்களில் விலையேற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கூகுள் பே மூலம் தங்கம் வாங்குங்கள்... பண்டிகை காலத்தில் செல்வத்தை குவியுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ