பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) பல 4 ஜி ப்ரீபெய்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் முழுமையாக வரம்பற்ற தரவு கிடைக்கிறது. இருப்பினும் மிகக் குறைவான மக்களுக்கே இந்த திட்டங்களைப் பற்றி தெரிந்திருக்கின்றது. பிஎஸ்என்எல்லின் இந்த திட்டங்களுக்கு தினசரி தரவு வரம்பு, அதாவது எஃப்யூபி இல்லை. பிஎஸ்என்எல் தவிர, வேறு எந்த நிறுவனமும் இந்த வகை வரம்பற்ற தரவை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. BSNL-லின் சில சிறந்த மற்றும் வரம்பற்ற 4 ஜி தரவுத் திட்டங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BSNL 4G ‘STV1098’
BSNL 4G ‘STV1098’, முழுமையாக வரம்பற்ற தரவுடன் கிடைக்கும் திட்டமாகும். BSNL-ன் 4 ஜி சேவை ஒரு சில வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆகையால் இந்த திட்டம் அனைவருக்கும் கிடைக்காது. இந்த திட்டத்தின் விலை ரூ .1,098 ஆகும். இதனுடன் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். 


BSNL 4G ‘STV599’
BSNL-லின் இந்த 4 ஜி ப்ரீ பெய்டு திட்டத்தின் (Prepaid Plans) விலை ரூ .599 ஆகும். இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்போடு, தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், 5 ஜிபி தரவை 90 நாட்களுக்கு தினமும் பயன்படுத்தலாம். பி.எஸ்.என்.எல்-லின் இன் 4 ஜி சேவை தற்போது ஆந்திரா, தெலுங்கானா, கொல்கத்தா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளது. இருப்பினும் நிறுவனம் 2022 க்குள் அனைத்து வட்டங்களிலும் 4 ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.


ALSO READ: BSNL ரூ.249 அதிரடி ரீசார்ஜ் திட்டம்; வாடிக்கையாளர்கள் குஷி!


BSNL தனது ரூ .398 சிறப்பு கட்டண வவுச்சரை (STV) கடந்த மாதம் மீண்டும் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. BSNL-லின் இந்த ரூ .398 ப்ரீ பெய்டு திட்டத்தில், வரம்பற்ற அழைப்புடன் தரவுகளும் கிடைக்கும். BSNL-லின் இந்த திட்டம் இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு விளம்பர சலுகையின் கீழ் ஏப்ரல் 9 வரையிலான கால அளவுக்கு தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது அதை மீண்டும் கொண்டு வருவதாக BSNL அறிவித்துள்ளது. இப்போது இந்த திட்டத்தின் பயனை ஜூலை 8 வரை பெறலாம்.


BSNL சென்னையின் ட்விட்டர் கணக்கிலிருந்து செய்யப்பட்ட ட்வீட் மூலம் சில தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது வரம்பற்ற தரவுகளுடன் (Unlimited Data) வரம்பற்ற அழைப்பையும் வழங்குகிறது. இந்த விலையில், எந்தவொரு தனியார் நிறுவனத்திடமும் வரம்பற்ற தரவுக்கான திட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது. பிஎஸ்என்எல்லின் இந்த திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.


ALSO READ:BSNL எடுத்த இந்த முடிவு கைகொடுக்குமா? Airel, Jio, Vi அலறல்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR