குறைந்த விலையில் BSNL யின் அசத்தலான திட்டம் அறிமுகம்!

BSNL புதிய Chillar Balance Transfer திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 13, 2021, 02:12 PM IST
குறைந்த விலையில் BSNL யின் அசத்தலான திட்டம் அறிமுகம்! title=

புதுடெல்லி: அரசு ரீதியான தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL புதிய ரீசார்ஜ் திட்டத்தை (Recharge Plan) அறிமுகப்படுத்துகிறது. இந்த முறை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்காக ஒரு தனித்துவமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இனி, ​​வாடிக்கையாளர்கள் மொபைல் ரீசார்ஜ் பெற்ற பிறகு மீதமுள்ள சில்லரில் இருந்து டோஃபி அல்லது சாக்லேட்டை கட்டாயமாக வாங்கிக்கொள்ள வேண்டியதில்லை. மீதமுள்ள சில்லரில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு முழு டாக்டைம்மையும் வழங்கும்.

Chillar Balance Transfer திட்டம் தொடங்கப்பட்டது
Keralatelecom அறிக்கையின்படி, BSNL புதிய Chillar Balance Transfer திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இனி வாடிக்கையாளர்கள் தங்கள் திட்டத்தை ரீசார்ஜ் செய்தபின் மீதமுள்ள பணத்திற்காக கடைக்காரரிடமிருந்து வலுக்கட்டாயமாக டோஃபி அல்லது மிட்டாய் பெற வேண்டியதில்லை. மீதமுள்ள பணத்திலிருந்து டாக்டைம்மையும் வாங்கலாம்.

ALSO READ | BSNL-ன் அதிரடியான 47 ரூபாய் recharge plan: அரண்டுபோன Airtel, Jio, Vi 

இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது
தகவல்களின்படி, வாடிக்கையாளர் 60 ரூபாயை ரீசார்ஜ் (Recharge Plan) செய்யும் போது கடைக்காரருக்கு 60 ரூபாய் தருகிறார். 56 ரூபாய் ரீசார்ஜ் செய்த பிறகு, கடைக்காரர் கட்டாயமாக டோஃபி அல்லது மிட்டாயை வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இப்போது வாடிக்கையாளர் தனது மொபைலில் டாக்டைம்மை மீதமுள்ள பணத்திலிருந்து பெறலாம். சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தின் கீழ், முழு டாக்டைம் நேரம் கிடைக்கிறது. இந்த திட்டம் கேரள தொலைத் தொடர்பு வட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

புதிய திட்டம் 1-9 ரூபாய் நிலுவைக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் அதே அளவு சில்லரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News