Recharge Plan: தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. இப்போது பி.எஸ்.என்.எல் (BSNL) ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பி.எஸ்.என்.எல் (BSNL) இன் இந்த புதிய திட்டம் தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கிறது. பிஎஸ்என்எல் அதன் பயனர்களுக்கு 599 ரூபாய்க்கான சிறந்த திட்டத்தை அளிக்கிறது.


இதில் 5 ஜிபி தினசரி தரவு, வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தங்களது ரூ .599 திட்டத்தில் 2 ஜிபி தினசரி தரவை மட்டுமே தருகின்றன. 


எந்த நிறுவனத்தின் திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்,  இந்த ரீசார்ஜ் திட்டங்களின் முழுமையான விவரங்கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.


ALSO READ: BSNL Free 4G SIM: யாருக்கு கிடைக்கும்? எப்படி வாங்கலாம்? விவரம் இதோ 


பிஎஸ்என்எல்லின் ரூ .599 திட்டம்:


பிஎஸ்என்எல்லின் (BSNL) இந்த திட்டத்தில், தினமும் 5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில், எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் உண்டு. இந்த திட்டத்தில் Zing செயலியின் இலவச சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.


ஏர்டெல்லின் ரூ .599 திட்டம்:


Airtel-லின் இந்த திட்டத்தில், நீங்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதியையும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்ஸையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் பிரைம் வீடியோ சந்தா கிடைக்கிறது. இந்த திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.


ஜியோவின் ரூ .599 திட்டம்:


Jio-வின்  இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு இதில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்கிலும் கால் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. 


இந்த திட்டத்தில் ஜியோ செயலியின் இலவச சந்தாவும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.


ALSO READ: BSNL சிறந்த ரீசார்ஜ் திட்டம்: 90 நாள் செல்லுபடியாகும், இன்னும் பல நன்மைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR