அரண்டுபோன Airtel, Jio, Vi; BSNL புதிய அசத்தல் திட்டம் அறிமுகம்
BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ. 447 ஆகும். இந்த திட்டம் எந்தவொரு டேட்டா கட்டுப்பாடும் இல்லாமல் வருகிறது. இந்த புதிய பிளான் குறித்து முழு விவரம் இங்கே காண்போம்.
இந்த திட்டம் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் வோடபோன்-ஐடியாவின் (Vodafone Idea) 60 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.447 திட்டத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து வெளிவந்துள்ளது. பிஎஸ்என்எல் (BSNL) இந்த புதிய திட்டத்துடன் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களின் நன்மைகளை ஒப்பிட்டுப் பார்த்து, இதில் எந்த திட்டம் ஒரே விலை பிரிவின் கீழ் அதிக நன்மையை வழங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
ALSO READ | BSNL அட்டகாச ரீசார்ஜ் திட்டம்: ஜியோ, ஏர்டெல்லுக்கு கடுமையான போட்டி
BSNL ரூ. 447 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் இந்த திட்டம் பயனர்களுக்கு 100 ஜிபி டேட்டாவை எந்த வரம்பும் இல்லாமல் வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 SMS, பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் பயன்பாட்டிற்கான 60 நாட்கள் சந்தா போன்றவற்றை இதில் வழங்குகிறது.
ஜியோவின் ரூ. 447 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 447 விலையில் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 447 திட்டம் 50 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 SMS மற்றும் JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவை வழங்குகிறது.
Vi ரூ. 447 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன்-ஐடியாவின் ரூ. 447 திட்டம் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா நன்மையை, வரம்பற்ற அழைப்பு நன்மையுடன் வழங்குகிறது. தினமும் 100 SMS மற்றும் Vi மூவிஸ் மற்றும் Vi டிவி கிளாசிக் ஆகியவற்றை 60 நாட்களுக்கு அணுக அனுமதி வழங்குகிறது.
ALSO READ | BSNL Free 4G SIM: யாருக்கு கிடைக்கும்? எப்படி வாங்கலாம்? விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR