அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் BSNL-இன் இந்த திட்டம்... முழு விவரம்!
BSNL Recharge Plans: இன்டர்நெட் டேட்டாவை விட வரம்பற்ற அழைப்பு ஆப்ஷனும் உங்களுக்கு தேவைப்பட்டால், பிஎஸ்என்எல் 439 ரூபாய்க்கு வழங்கும் இந்தத் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
BSNL Recharge Plans: பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வகையான திட்டங்களைக் கொண்டு வருகிறது. பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட அழைப்பு, வரம்பற்ற பேசும் விருப்பங்களை பெறும் இத்தகைய திட்டங்களைத் தொடர்ந்து கொண்டு வருகிறது.
இன்டர்நெட் டேட்டாவை விட வரம்பற்ற அழைப்பு ஆப்ஷனும் உங்களுக்கு தேவைப்பட்டால், இந்தத் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிஎஸ்என்எல்-இன் ரூ.439 திட்டம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். இந்தத் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | தினம் 5 ரூபாய் போதும்.. 600ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் இலவச ஓடிடி
ரூ. 439 ப்ரீபெய்ட் திட்டம்
BSNL-இன் ரூ.439 ப்ரீபெய்ட் திட்டம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில் தினசரி அன்லிமிடெட் குரல் அழைப்பும் கிடைக்கிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் இணைய டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் OTT தளத்தின் இலவச சேவையைப் பெறுவதில்லை.
இந்த நன்மைகள் கிடைக்கும்
BSNL இன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்பு சேவையைப் பெறுகிறார்கள். வரம்பற்ற அழைப்புடன் உள்ளூர், எஸ்டிடி, தேசிய ரோமிங் ஆகியவை இதில் அடங்கும். இதனுடன், வாடிக்கையாளர்கள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள MTL நெட்வொர்க்கில் இலவச அழைப்பு சேவையையும் பெறுவார்கள். இது தவிர, பிஎஸ்என்எல்லின் ரூ.439 பேக்கில் 300 எஸ்எம்எஸ் சேவை கிடைக்கிறது.
BSNL இன் ரூ.797 திட்டம்
BSNL இன் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டமானது 365 நாட்கள் அதாவது 12 மாதங்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்பு சேவையையும் பெறுகிறார்கள். மேலும், நீங்கள் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம். இருப்பினும், 60 நாட்களுக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில், தினசரி 2 ஜிபி வரம்பு முடிந்ததும், இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும்.
மேலும் படிக்க | பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.50 க்கும் குறைவான சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் லிஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ