மும்பை: மகாராஷ்டிராவில் பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட 11 பேர் உயிரிழந்தனர், பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நவி மும்பையில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துக் கொண்ட பூஷன் விருது வழங்கும் விழாவில் திறந்த வெளியில் அமர்ந்திருந்த 11 பேர் வெப்ப அலையால் உயிரிழந்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு சுமார் 50 பேர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா அரசின் ’பூஷன் விருது’ வழங்கும் நிகழ்வு நவி மும்பையில் நேற்று (ஏப்ரல் 16, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அப்போது அங்கு பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டது.
மாநில அரசின் பூஷன் விருதை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி, நவி மும்பையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது.
மேலும் படிக்க | 12 வயது சிறுமிக்கு ஆபாச படம்.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
பிரமாண்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி நடைபெர்ற திறந்தவெளி மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பார்வையாளர்களுக்கான இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், வெயிலில் இருந்து பாதுகாக்க, நிழல் தரும் வகையில் பந்தல் ஏதும் அமைக்கப்படவில்லை.
கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் அப்படியே சரிந்தார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மயங்கிய நிலையில், அவர்கள் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 11 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#WATCH| Navi Mumbai: Uddhav Thackeray, Aditya Thackeray & NCP leader Ajit Pawar interact with Doctor in MGM Kamothe Hospital, take stock of the situation
11 people died & more than 20 are undergoing treatment after they suffered heatstroke during Maharashtra Bhushan Award… pic.twitter.com/0nNGvGlFXW
— ANI (@ANI) April 16, 2023
திரு ஷிண்டே இந்த சம்பவம் "துரதிர்ஷ்டவசமானது" என்று கூறியதுடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹ 5 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.
வெப்பம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைசர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Bizarre! கொரோனாவால் 'இறந்த' நபர்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அதிசயம்!
"மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சிலர் வெப்பத்தால் இறந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களின் குடும்பங்களின் துயரத்தில் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்," என்று திரு ஃபட்னாவிஸ் மராத்தியில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த இடத்தில் பணியில் இருந்த வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “நிகழ்ச்சியின் போது 123 பேர் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகள் குறித்து புகார் அளித்துள்ளனர். உடனடியாக அவர் அந்த இடத்தில் உள்ள 30 மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 13 நோயாளிகள் சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தெரிவித்தார்”.
நேற்று நவி மும்பையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. அடுத்த ஐந்து நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கடண்டஹ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | கரூர்: பைனான்சியரை ஏமாற்றிய கல்யாண ராணி - டிக்டாக்கில் போட்ட ஸ்கெட்ச்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ